ஆஸ்திரேலியாவில் பராமரிப்பாளர்களுக்கான உதவிகளை எவ்வாறு பெறுவது?

SG Carers Support - Senior woman with caregiver in the garden

Senior woman with caregiver in the garden Credit: FredFroese /Getty Images

ஆஸ்திரேலியாவில் ஒன்பது பேரில் ஒருவர் பராமரிப்பாளர்களாக இருக்கிறார்கள். வயதான அல்லது பலவீனமான உறவினர் அல்லது நண்பர் அல்லது உடல்நலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளியான ஒருவரைப் பார்த்துக்கொள்பவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.


பெரும்பாலும், பல பராமரிப்பாளர்கள் தங்களை ஒரு பராமரிப்பாளராக அடையாளம் கண்டுகொள்வதில்லை, அல்லது அவர்களுக்கு கிடைக்கும் இலவச ஆதரவு சேவைகள் தொடர்பில் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் பராமரிப்பாளர்கள் உள்ளனர். பராமரிப்பாளர்கள் எல்லா வயதிலும், பாலினத்திலும், வாழ்க்கையின் நிலைகளிலும் வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று, வாழ்க்கையில் ஆதரவு தேவைப்படும் ஒருவருக்கான அவர்களது அர்ப்பணிப்பு என்கிறார் அனுபவம் வாய்ந்த உளவள ஆலோசகரும் சமூக உதவிப் பணியாளருமானPatty Kikos.

ஒரு பராமரிப்பாளராகவும் இருக்கின்ற Patty Kikos ஆஸ்திரேலிய அரசால் நிதியளிக்கப்படும் பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு வலையமைப்பான Benevolent Society and Carer Gateway வழங்கும் 'Carer Conversations' போட்காஸ்டின் தொகுப்பாளராகவும் உள்ளார்.
AMCS
Caring hands Credit: AMCS
சிலர் தமது அன்புக்குரியவர்கள் விபத்து அல்லது நோயால் பாதிக்கப்பட்ட பிறகு பராமரிப்பாளர்களாக மாறும் அதேநேரம் இன்னும் சிலர் பராமரிப்பாளர்களாக மாறுவது படிப்படியாக நடக்கிறது.

ஒரு பராமரிப்பாளரின் பொறுப்புகள் உடல் மற்றும் தனிப்பட்ட ரீதியான கவனிப்பை வழங்குவது முதல் உணர்வு மற்றும் சமூக ரீதியான ஆதரவு வழங்குவது வரை இருக்கலாம்.

பராமரிப்பாளரின் வழக்கமான கடமைகளில் ஆடை அணிவித்தல், குளிப்பது மற்றும் கழிவகற்றலில் உதவுதல், உணவு, சுத்தம் செய்தல் மற்றும் மருந்துகளை நிர்வகித்தல் ஆகியவை அடங்கும். இவைதவிர மருத்துவ மற்றும் ஏனைய சந்திப்புகளில் கலந்துகொள்ளக்கூடும். மேலும் வங்கி மற்றும் அவசரநிலைகளிலும் உதவலாம்.

எதிர்பாராத சூழ்நிலைகள் ஒரு பராமரிப்பாளரின் வாழ்க்கையை மாற்றலாம். இது ஒரு குடும்பத்தின் கட்டமைப்பையும் இயக்கவியலையும் மாற்றக்கூடும். உதாரணமாக சில சமயங்களில் நீங்கள் ஒரு மகளாக இருந்ததிலிருந்து உங்கள் பெற்றோரின் பராமரிப்பாளராக மாறக்கூடும் அல்லது மனைவி என்பதிலிருந்து பராமரிப்பாளராக மாற நேரிடலாம் என்கிறார் அனுபவம் வாய்ந்த உளவள ஆலோசகரும் சமூக உதவிப் பணியாளருமான Patty Kikos.
SG Carers Support - son and mother
Australia's medical and social support systems would not cope without the contribution of unpaid carers, so the government recognises the importance of supporting carers in practising necessary self-care. Credit: Erdark/Getty Images
ஆஸ்திரேலியாவின் மருத்துவ மற்றும் சமூக ஆதரவு அமைப்புகள் ஊதியம் பெறாத பராமரிப்பாளர்களின் பங்களிப்பு இல்லாமல் சமாளிக்க முடியாது என்பதால் இத்தகைய பராமரிப்பாளர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை அரசு அங்கீகரிக்கிறது.

பல பராமரிப்பாளர்கள் தங்களை அப்படி அடையாளம் காணத் தவறிவிடுவதால் தம்மைக் கவனிக்காமல் புறக்கணிக்கலாம். உணர்ச்சி அழுத்தங்கள், நிதி நெருக்கடிகள், சமூகத்திலிருந்து தனிமை மற்றும் நடைமுறைச் சுமைகள் போன்றவற்றைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் ஆதரவு சேவைகள் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

Services Australia, Centrelink, My Aged Care மற்றும் NDIS மூலம் பராமரிப்பாளர்களுக்கான இருவார(fortnightly) உதவித்தொகை மற்றும் பிற உதவிகளைப் பெற சிலர் தகுதியுடையவர்களாக இருக்கலாம். இக்கொடுப்பனவுத் தொகைகள் Age Pension-ஓய்வூதியத்துடன் ஒப்பிடப்படலாம் என்றபோதிலும் இது தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்தது. ஏனெனில் இந்த உதவிகள் பராமரிப்பைப் பெறும் நபர் மற்றும் பராமரிப்பாளரின் வருமானம் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
SG Carers Support - Mother playing with son with Cerebral Palsy
Mother drawing with son with Cerebral Palsy Credit: ferrantraite/Getty Images
இருப்பினும், வருமான சோதனை செய்யப்படாத பிற இலவச சேவைகளும் பராமரிப்பாளர்களுக்கு கிடைக்கின்றன. Carer Gateway மூலம் நீங்கள் பலவற்றை அணுகலாம்.

Carer Gateway தேசிய எண்ணை அழைக்கும் போது, அது உங்களை உங்கள் உள்ளூர் சேவை வழங்குனருடன் தானாகவே இணைக்கும். சக பராமரிப்பாளர்களால் வழங்கப்படும் ஆதரவு, ஆலோசனை, பயிற்சி போன்ற பல சேவைகளை நீங்கள் பெறலாம்.

Carer packageகளில் பல இலவச பயிற்சி அமர்வுகள் அடங்கும். சந்திப்புகள் தொலைபேசி மூலமாகவோ, வீடியோ அழைப்பு மூலமாகவோ அல்லது நேரில் செல்லக்கூடியதாகவோ இருக்கலாம்.

ஈராக்கில் பிறந்த ஹயா அல்ஹிலாலி இரண்டு வருடங்களுக்கும் மேலாக Carer Gateway உடன் Carer Coach-ஆக இருந்து வருகிறார்.

அவரது சக பணியாளர்கள் பலரைப் போலவே, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்திலிருந்து பராமரிப்பாளர்களை ஆதரிப்பதற்கான உந்துதல் பெற்றுள்ளார். அவரது விடயத்தில், கடுமையான காயமொன்றுக்கு சிகிச்சை பெற்ற தன்னை தன் அம்மா எப்படி பராமரித்தார்கள் என்பது நினைவிருப்பதாக அவர் கூறுகிறார்.
SG Carers Support - Caregiver embracing man at home
Rear view of female caregiver embracing while greeting man at home Credit: Klaus Vedfelt/Getty Images
Carer Gateway packageகளில் emergency respite, போக்குவரத்து உதவி அல்லது சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல நடைமுறை உதவிகளும் அடங்கும்.

களைப்பைத் தடுக்க அல்லது உடல் உளைச்சலில் இருந்து விடுபட உதவிவழங்குவது என பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான சவால்களில் சிலவற்றிலிருந்து விடுபட இடமளிப்பதே Carer Gateway packageகளின் நோக்கமாகும்.

ஹயா போன்ற Carer coaches எல்லாப் பின்னணியிலிருந்தும் வரும் பராமரிப்பாளர்களின் மேம்பாட்டிற்கென வேலை செய்கிறார்கள்.

பல புலம்பெயர்ந்த பின்னணிகொண்ட பராமரிப்பாளர்கள் தங்கள் பலத்தை அடையாளம் காண்பதில்லை எனவும் சுய பாதுகாப்பு, இலக்கு அமைத்தல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றும் ஹயா கூறுகிறார்.
carer
Source: SBS
வயதான உறவினர்களை கவனித்துக்கொள்பவர்கள், primary unpaid carersக்கான காலாண்டு இதழான Australian Carer’s Guide மூலம் ஏராளமான தகவல்களை அணுகலாம்.

தனது வயதான பெற்றோரைப் பராமரிக்கும் பயணத்தின் போது தான் அனுபவித்த சிக்கல்களை அடிப்படையாகவைத்து இந்த பிரசுரத்தை ஆரம்பித்ததாக Paul Koury கூறுகிறார்.

குறிப்பாக பராமரிப்பாளர்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாகவும், பாராட்டப்படாதவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் உணர்வதாகவும் ஓய்வு, வீட்டுப் பராமரிப்பு போன்ற உடல்ரீதியான ஆதரவை எங்கு பெறுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை எனவும் இப்படியானவர்கள் உதவி பெறுவதை தாம் எளிதாக்குவதாகவும் Paul Koury தெரிவித்தார்.
SG Carers Support -  child with teddy bear
Girl plays doctor doctor giving bandaged teddy an injection with a toy syringe. Credit: Donald Iain Smith/Getty Images
இதை ஆமோதிக்கும் அனுபவம் வாய்ந்த உளவள ஆலோசகரும் சமூக உதவிப் பணியாளருமான Patty Kikos, பராமரிப்பாளர்கள் தமது நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதற்குத் தேவையான அம்சங்களை அணுகுவதும் இன்றியமையாதது என்று கூறுகிறார்.

அந்தவகையில் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதும் அவசியமாகும்.

ஒரு வேடிக்கையான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது அல்லது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் வரைவது, அல்லது நண்பருடன் நடப்பது, அல்லது தனியாக இருப்பது என எதுவாக இருந்தாலும் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு உகந்தவற்றைச் செய்வது மிகவும் முக்கியம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share