ஆஸ்திரேலியாவின் தேசிய கோடைகால விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட், உள்ளூரில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த விளையாட்டு 16 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது. 1804 இல் சிட்னியில் பதிவுசெய்யப்பட்ட முதல் போட்டியுடன் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் அதன் வரலாற்றைத் தொடங்கியது.
அப்போதிருந்து, ஆஸ்திரேலியா ஒரு செழுமையான கிரிக்கெட் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறது. Ellyse Perry மற்றும் Sir Donald Bradman போன்ற ஜாம்பவான்கள் உட்பட காலத்திற்குக் காலம் சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வருகிறது.
இந்த விளையாட்டை அனுபவித்து மகிழ்வதற்கு அதன் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்களைக்கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் விளையாடப்படுகிறது,
Wickets in a stadium. Source: Getty / Colin Anderson
ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் விளையாடும் போட்டியின் கால அளவு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மாறுபடும்.
துடுப்பெடுத்தாடும் அணி எவ்வளவு ஓட்டங்களை எடுக்க முடியுமோ அவ்வளவு ஓட்டங்களை எடுக்க முயலும், களத்தடுப்பில் ஈடுபடும் அணி அவர்களை ஆட்டமிழக்கச் செய்வதற்கு முயலும்.
கிரிக்கெட்டைப் பார்க்கும்போது நீங்கள் அதிகம் கேட்கக்கூடிய இன்னும் சில கிரிக்கெட் சொற்கள் உள்ளன– deliveries, overs மற்றும் innings.
துடுப்பெடுத்தாடுபவரை நோக்கி பந்து வீசப்படுவதானது delivery எனப்படும்.
இப்படி ஆறு பந்துகள் வீசப்படுவது ஒரு ஓவர் எனப்படும். அனைத்து ஓவர்களும் வீசப்படும் வரை அல்லது எதிரணியின் 10 வீரர்களும் ஆட்டமிழக்கும் வரை பந்துவீச்சு தொடரும். ஒரு அணி தனது பேட்டிங் அல்லது பந்துவீச்சை முடிக்கும்போது இது ஒரு இன்னிங்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது.
Bowled out. Credit: Patrick Case/pexels
ஆஸ்திரேலியாவில் கோடைகாலம் என்பது குறுகிய மூன்று மணி நேர போட்டிகள் முதல் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் வரை பலவிதமான tournaments மற்றும் matches விளையாடப்படும் காலமாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டின் பழமையான வடிவம். இது பொதுவாக இரண்டு இன்னிங்ஸ்களை உள்ளடக்கியது.
ஆஷஸ் என்பது மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாகும், இது 1882 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே விளையாடப்பட்டு வருகிறது. இரு நாடுகளிலும் மாறி மாறி போட்டி நடைபெறும். ஆஸ்திரேலியாவில் போட்டிகள் நடக்கும் போது பல தலைநகரங்களில் இவை நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் சுமார் ஐந்து நாட்களுக்கு நீடிக்கலாம் என்பதுடன் இரு அணிகளும் இரண்டு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். அதாவது இரண்டுமுறை துடுப்பெடுத்தாட வேண்டும், மேலும் இரண்டு முறை பந்து வீச வேண்டும்.
One Day International (ODI) ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் என்பது ஒரு குறுகிய விளையாட்டு. ஒரு அணிக்கு 50 ஓவர்கள் மட்டுமே உள்ளன, அதனால்தான் அதை ஒரே நாளில் முடிக்க முடிகிறது.
ஆஸ்திரேலியா பெரும்பாலும் உலகெங்கிலும் உள்ள அணிகளுடன் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியிடுகிறது.
A family plays backyard cricket. Source: Getty / Marilyn Nieves
இந்த வடிவத்தில், ஒவ்வொரு அணியும் இருபது ஓவர்கள் கொண்ட ஒரு போட்டியில் விளையாடுகிறது.
BBL என்று அழைக்கப்படும் Big Bash League Australian men’s professional T20 league ஆகும், இது பல்வேறு ஆஸ்திரேலிய நகரங்களில் இருந்து அணிகளைக் கொண்டுள்ளது.
அதேபோல பெண்களுக்கான WBBL அல்லது Women’s Big Bash Leagueஉம் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டி20 வரை கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடித்த போட்டிகளைவிட சில சாம்பியன்ஷிப்புகள் பிரபலமாக உள்ளன.
உதாணமாக World Test Championship (WTC)ஐ குறிப்பிடலாம்.
இதன் இறுதிப் போட்டி பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
இதேவேளை Cricket World Cups -கிரிக்கெட் உலகக் கோப்பைகள் One Day International மற்றும் T20 வடிவங்களில் நடத்தப்படுகின்றன மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. One Day International உலகக் கோப்பை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், T20 உலகக் கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.