விஜயகாந்த் எப்படி, ஏன் அரசியலுக்கு வந்தார்?

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

வேறு எந்த பிரபலமான இரண்டாம் கட்டத் தலைவரும் இல்லாத நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் தே.மு.தி.க., தனது ஒட்டு வங்கியைத் தக்க வைத்திருப்பதன் முக்கிய காரணம், விஜயகாந்தின் திரை வசீகரம்தான் என்று கூறலாம். தற்போதைய தமிழக அரசியல் தலைவர்களிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட அதே வேளையில், அதிகம் நாடப்பட்டு வரும் ஒருவர் உண்டென்றால், அது நடிக-அரசியல்வாதியும், மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக அணியின் முதலமைச்சர் வேட்பாளருமான விஜயகாந்த் அவர்களே. முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் பதினொன்றாம் பாகம் இது குறித்து அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்



Share