விஜயகாந்த் அரசியல்வாதியானது விபத்தா? திட்டமிட்டசெயலா?
SBS Tamil Source: SBS Tamil
விஜயகாந்த் அரசியலுக்கு அடியெடுத்து வைப்பதற்கு, அவரது திரைப்பட கதாபாத்திரங்கள் எவ்வாறு அடித்தளமாகப் பயன்பட்டன? அரசியலுக்குள் நுழையும் முன்னர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக, விஜயகாந்த், எப்படி தனது திரை ஆளுமையை உருவாக்கினார்?, விஜயகாந்த் அரசியல்வாதியானது ஒரு விபத்தா? திட்டமிட்ட செயல்பாடா? அல்லது காலத்தின் கட்டாயமா? விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஏதுவாக, அவரது திரையாளுமை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? முக்கியமாக, எம்ஜியாரின் திரைச்சூத்திரத்தை, தனக்கு சாதகமாக, விஜயகாந்த் எங்கனம் பயன்படுத்தினார்? எம்ஜியார், ரஜினி, விஜயகாந்த்- இவர்களின் ஆளுமைகளின் ஒற்றுமை-வேற்றுமைகள் என்னென்ன? என்பது போன்ற வினாக்களை கொட்டகையிலிருந்து கோட்டைக்குத் தொடரின் பன்னிரண்டாம் பாகம் அலசுகிறது.முனைவர் தாமு படைக்கும் கொட்டகையிலிருந்து கோட்டைக்கு தொடரின் பதினொன்றாம் பாகம் இது குறித்து அலசுகிறது. ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்
Share