அரசியலில் விஜயகாந்த் எப்படி “கறுப்பு MGR” ஆனார்?
SBS Tamil Source: SBS Tamil
விஜயகாந்தின் பலம் என்ன? அவர் உளறுவதாக பத்திரிகைகள் கூருவது குறித்து அவர் என்ன சொல்கிறார்? மக்கள் ஊடகங்கள் முன்னிறுத்தும் விஜயகாந்தை எப்படி பார்கின்றனர்? நிழல்-நிஜ ஆளுமையை இன்றைய இளைய தலைமுறையினர் எப்படி பார்க்கின்றனர்? தனது திரைப்பட கதாபாத்திரங்களை வடிவமைப்பது முதல், எம்ஜியார் பயன்படுத்திய பிரச்சாரக் கூண்டு வண்டியை, தன்னுடைய தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தியது, தன்னை 'கறுப்பு எம்ஜியார்' என்று அழைக்கும்படி தன்னுடைய தொண்டர்களை ஊக்கிவித்தது வரைக்கும், விஜயகாந்த் தனது நிழல்-நிஜ ஆளுமைகளில், எம்ஜியாரை நகலெடுக்க முயற்சித்தார். அதில் விஜயகாந்த் வெற்றி காண்பாரா? "கொட்டகையிலிருந்து கோட்டைக்கு" தொடரின் பதினைந்தாம் பாகம் விடை தேடுகிறது.ஒலிக்கும் குரல்கள்: மகேந்திரராஜா பிரவீணன் & காந்திமதி தினகரன்; தயாரிப்பு: றைசெல்.
Share