பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை

AIATSIS Paper and Talk_Linguist with PKKP Aboriginal Corporation, Pinikura language group (Pilbara region, WA)_credit AIATSIS.JPG

AIATSIS Paper and Talk_Linguist with PKKP Aboriginal Corporation, Pinikura language group. Credit: AIATSIS

ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாக வந்த எவரும் தங்கள் தாய் மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள். மொழி ஒருவர் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடி மக்களின் மொழிகள் வேறுபட்டவை அல்ல. அந்த மக்களை, நிலத்துடனும் அவர்களது மூதாதையர் அறிவுடனும் மொழி இணைக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பூர்வீகக் குடி மக்களால் தற்போது பேசப்படுகின்றன. சிலவற்றை ஒரு சிலரே பேசுகிறார்கள், மேலும் பெரும்பாலானவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. ஆனால், பல மொழிகள் புத்துயிர் பெறுகின்றன. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இன்றைய நிகழ்ச்சியில், பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் அதன் மறுமலர்ச்சி குறித்து ஆராய்வோம்.


முக்கிய புள்ளிகள்
  • இன்று நமது பூர்வீகக் குடி மக்களால் 100க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
  • பல மொழிகள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
  • 31ற்கும் மேற்பட்ட சமூகங்கள் தங்கள் மொழிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருவதாக தேசிய பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் கணக்கெடுப்பு கண்டுபிடித்துள்ளது.
SBS ் நிகழ்ச்சித் தொடர் ஆஸ்திரேலியாவில் உங்கள் புதிய வாழ்க்கையை அமைக்க, வழிநடத்த உதவுகிறது - அனைத்து நிகழ்ச்சிகளையும் .




ஒரு இடம் மற்றும் அதன் மக்களுக்குத் தனித்துவமானது மொழி - நிலம் மொழியைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.
மொழி தனது அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பது எப்படி என்பதை விளக்குகிறார் பூர்வீக மொழிகள் அறக்கட்டளையின் துணைத் தலைவர் Cathy Trindall.

“நான் Narrabriயின் கருப்பு மண் தளங்களான வடமேற்கு NSW ஐச் சேர்ந்த Gomeroi Murri Yinnar இனக் குழுவைச் சேர்ந்தவர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் என் பெயர், என் மொழி, என் கலாச்சாரம் அதைச் சொல்கிறது, அதுதான் எனது சொந்த இடம்.”

எனவே உங்கள் மொழி உங்களிடமிருந்து பறிக்கப் பட்டால் என்ன நடக்கும்? இது தான் எங்கள் பூர்வீகக் குடி மக்களின் அனுபவம்.

AIATSIS Paper and Talk_Kukatj language group_credit AIATSIS.jpg
AIATSIS Paper and Talk_Kukatj language group. Credit: AIATSIS

ஆஸ்திரேலியாவில் எத்தனை மொழிகள் பேசப்பட்டன?

ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு ஆஸ்திரேலியா முழுவதும் நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் இந்த நாட்டில் வழக்கத்தில் இருந்தன.
இதற்கு பதிலளிக்க சில வழிகள் உள்ளன.  மேற்கு NSW ஐச் சேர்ந்த ஒரு பெருமை மிக்க Wiradjuri பின்னணி கொண்டவரும், Australian Institute of Aboriginal and Torres Strait Islander Studies அல்லது சுருக்கமாக AIATSIS என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் John Gibbs கூறுகிறார்.

“ஒருவர் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வேறுபட்ட மொழிகளை மட்டும் கருத்தில் கொண்டால், 250ற்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள் இருந்தன என்று கூறலாம்” என்று அவர் விளக்குகிறார்.

“இருப்பினும், மொழியும் சமூக அடையாளத்தின் ஒரு வடிவம்.  ஆஸ்திரேலிய ஆங்கிலமும் அமெரிக்க ஆங்கிலமும் தொழில்நுட்ப ரீதியாக ஒரே மொழி, ஆனால் ஆஸ்திரேலியர்களாக நாம் நிச்சயமாக ஒன்றை மிகவும் வலுவாக அடையாளம் காண்கிறோம், அமெரிக்க ஆங்கிலத்தை அல்ல. சமூக அடையாளத்தின் பார்வையில் இருந்து நீங்கள் மொழிகளைப் பார்த்தால், அவை ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் 600 முதல் 800 வெவ்வேறு மொழி வகைகள் இருந்தன எனலாம்.”

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை வேகமாகக் குறைந்தது.

பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் குறித்து, AIATSIS கணக்கெடுப்பு நடத்துகிறது.  .  தற்போது 123 பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன அல்லது புத்துயிர் பெற்றுள்ளன என்று கண்டறிந்துள்ளது.

இதில் Torres Strait தீவு மக்களின் தனித்துவமான மொழிகளும் அடங்கும்.

Torres Strait தீவுகளைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் Leonora Adidi.  ஆஸ்திரேலிய பூர்வீகக் குடி மக்களிடமிருந்து Torres Strait தீவு மக்கள் வேறுபட்டவர்கள், ஒரு தனித்துவமான கலாச்சாரக் குழு என்று கூறும் அவர், அந்த இனக் குழுவிற்குள்ளும் கூட அவர்கள் ஆறு பேச்சுவழக்குகளுடன் இரண்டு தனித்துவமான மொழிகளைப் பேசுகிறார்கள் என்கிறார்.

“Torres Strait தீவுகளின் மேற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள ஒரு குழு பேசும் மொழி, பூர்வீகக்குடி மக்கள் மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. Torres Strait தீவுகளின் கிழக்குப் பகுதியில் பேசப்படும் மொழிகளில் பப்புவா மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் பொதுவானவை, ஆனால் இலக்கணம் மற்றும் சொற் களஞ்சியம் தனித்துவமானவை.”

ஆஸ்திரேலிய புள்ளிவிவரத் துறையின் தரவுகள், இப்போது அதிகம் பேசப்படும் பூர்வீகக் குடிமக்கள் மொழி, Torres Strait Island Creole என்று அழைக்கப்படும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆஸ்திரேலிய ஆங்கிலம் மற்றும் பாரம்பரிய மொழிகளின் ஒரு கலவை என்று கூறுகிறது.  ஒப்பீட்டளவில், இது ஒரு சமீபத்திய சமூக மொழியாகும்.

Teacher And Her Female Students
Young aboriginal female students sitting with their tutor outdoors in the sun in Australia. Credit: SolStock/Getty Images

மொழிகள் எங்கே போயின?

ஐரோப்பிய குடியேற்றத்தைத் தொடர்ந்து, அந்தக் காலத்தில் பூர்வீகக் குடி மக்கள் அனைவரையும் ஐரோப்பிய மயமாக்கும் ஒருங்கிணைப்பு கொள்கைகள், மற்றும் குழந்தைகளை அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களிலிருந்து கட்டாயமாகப் பிரித்ததன் காரணமாக அனைத்து பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் கிட்டத்தட்ட அழியும் நிலைக்குச் சென்றன, சில அழிந்தும் விட்டன.
பூர்வீகக் குடிமக்கள் தங்கள் சொந்த மொழியைப் பேசும் உரிமை மறுக்கப்பட்டது. ஆனால் சில மொழிகள் இரகசியமாகப் பேசப்பட்டு, அமைதியான முறையில் இளைய தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

 

ஆஸ்திரேலியா மற்றும் Torres Strait தீவுகள் முழுவதும் வாழும் முதியவர்களால் மட்டுமே பூர்வீகக் குடிமக்களின் மொழி ஏதாவது பேசப்படுகிறது.  நூறு மொழிகள் அழியும் தறுவாயில் உள்ளன.  மேலும், 12 மொழிகள் மட்டுமே குழந்தைகள் பேசும் முதல் மொழியாக இருக்கின்றன.

பல பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் உறக்க நிலையில் இருந்தன என்று குறிப்பிடப்படுகின்றன.

சில காலமாகப் பேசப்படாத மொழிகளை நாங்கள் உறக்க நிலையில் உள்ள மொழிகள் என்று அழைக்கிறோம். அவை இறந்தவை அல்லது அழிந்துவிட்டவை அல்ல. ஏனென்றால் தூங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை மீண்டும் எழுப்ப முடியும்
John Gibbs, AIATSIS

மொழிகளின் மறுமலர்ச்சி

ஆஸ்திரேலியாவில் பூர்வீகக் குடிமக்களின் மொழிகள் மீண்டும் விழித்தெழுகின்றன.
பூர்வீகக் குடிமக்களின் மொழிகளைப் பாதுகாப்பதற்கான முதல் சட்டம் 2017 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

NSW மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி மொழிகள் என்றும், பூர்வீகக் குடிமக்கள் இந்த மொழிகளின் பாதுகாவலர்கள் என்றும் The Aboriginal Languages Act - பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் குறித்த சட்டம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கிறது.

ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

31ற்கும் மேற்பட்ட சமூகங்கள் தங்கள் மொழிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருவதாக தேசிய பூர்வீகக் குடிமக்கள் மொழிகள் கணக்கெடுப்பு கண்டுபிடித்துள்ளது. ஒரு மொழியின் மறுமலர்ச்சி என்பது, பேசப்படாத ஒரு மொழி, சில காலத்திற்குப் பிறகு மீண்டும் பலர் பேசும் மொழியாக மாற்றமடைவதாகும்.  இதனால் சமூகங்களின் போக்கு திசை திரும்புகின்றன.

ஆனால், “பல மொழிகள் உள்ளன. நாம் ஒருமொழி பேசும் சமூகம் அல்ல. ஆதரவைப் பெறுவதிலும், அந்த மொழிகளைப் புத்துயிர் பெறுவதற்கான நாடு தழுவிய திட்டத்தை திறம்பட செயல் படுத்துவதற்கும் ஒருமொழி பேசும் இனத்தின் மொழிகள் எதிர்கொள்ளும் சவால்களை விட, இந்த மொழிகள் மிக அதிகப்படியான சவால்களை எதிர்கொள்கின்றன” என்று Leonora Adidi வலியுறுத்துகிறார்.

சில மொழிகள் செழித்து வளர்ந்தாலும், மற்றவை ஒரு சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன.

2024 Paper and Talk Participants, AIATSIS, and Living Languages. Photo AIATSIS.jpg
2024 Paper and Talk Participants, AIATSIS, and Living Languages. Credit: AIATSIS

AIATSIS இன் பங்கு

AIATSIS Centre for Australian Languages (ACAL) என்ற மையம், பூர்வீகக் குடிமக்கள் மொழிகளின் மறுமலர்ச்சியை ஆதரிக்க சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
கையெழுத்துப் பிரதிகள், பத்திரிகைகள் மற்றும் காணொலி பதிவுகளை, குறிப்பாக பூர்வீகக் குடியின மற்றும் Torres Strait தீவு மக்களுடன் ஈடுபட்ட ஆரம்பகால ஐரோப்பிய ஆய்வாளர்களிடமிருந்து பெற்று AIATIS ஆவணப்படுத்தியுள்ளது.

'Paper and Talk' என்ற பட்டறைத் தொடருக்கும் ACAL நிதி ஆதரவு வழங்குகிறது.  இது சமூக ஆராய்ச்சியாளர்களை நிறுவனத்திற்கு அழைத்து வந்து, அங்கு அவர்கள் அனுபவம் வாய்ந்த மொழியியலாளர்களுடன் சேர்ந்து தங்கள் மொழியை உயிர்ப்பிக்கும் செயல் முறையைக் கற்றுக் கொள்கிறார்கள்.

“இரண்டு வாரங்களின் முடிவில், மொழி மறுமலர்ச்சிக்கான பயணத்தைத் தொடங்க சமூகத்திற்குத் திரும்ப எடுத்துச் செல்ல ஒரு மொழி வளத்தை அவர்கள் உருவாக்கி விடுவார்கள்” என்று John Gibbs கூறுகிறார்.

இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் .


Warlpiri Dictionary_AIATSIS.jpg
Warlpiri Dictionary

பாடசாலைகள் மூலம் மொழிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் திட்டங்கள்

ஒரு மொழி செழிக்க வேண்டுமானால் அது இளைஞர்களால் பேசப்பட வேண்டும்.
NSW மாநிலத்தில், Gumbaynggirr Giingana [[goom-be-nyi gi-na-na]] Freedom School என்ற bilingual school - இரு மொழிப் பாடசாலை 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Cathy Trindallலின் பேரன் இந்த ஆண்டு அங்கே படிக்கத் தொடங்குகிறார்.  கலாச்சார ரீதியாக ஒரு முழுமையான கல்வியை அவர் பெறுவார்.

“விலங்குகளினதும் பறவைகளினதும் பெயரைக் கற்றுக்கொள்வது மட்டும் முக்கியமல்ல.  அவர்கள் ஒரு சுற்றுலா சென்றால், பூர்வீக மக்களின் Dreaming path - கனவு காணும் பாதையைப் புரிந்து கொள்வார்கள்.  படைப்புக் கதைகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் யார் என்பதை மீண்டும் இணைக்கும் கதைகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள்” என்கிறார் Cathy Trindall.
A classroon at The Gumbaynggirr Giingana Freedom School in New South Wales (NSW).
A classroon at The Gumbaynggirr Giingana Freedom School. Credit: SUSAN

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு மூலம் மொழியை வளர்ப்பது

National Accreditation Authority for Translators and Interpreters – சுருக்கமாக NAATI என்ற நிறுவனம் 2012ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பூர்வீகக் குடிமக்கள் அமைப்புகளுடன் இணைந்து அதன் பூர்வீகக் குடிமக்கள் மொழிகளின் மொழிபெயர்ப்பு திட்டத்தின் மூலம் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.
அனைத்து பூர்வீகக் குடி மக்களும் இதில் பங்கேற்க வேண்டும், மேலும் இந்நாட்டில் அவர்களது மொழிக்கான உரிமைகளை அவர்கள் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

NAATI சான்றிதழ் பெற்றுள்ள Pintupi-Luritja [[pin-ta-pi loo-rich-a]] மொழிபெயர்ப்பாளர் மற்றும் உரைபெயர்ப்பாளர் ஒருவர் Lavinia Heffernan.

“ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டிராதவர்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம், சில சமயங்களில் ஆங்கிலம் அவர்களின் ஐந்தாவது அல்லது ஆறாவது மொழியாக இருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.

“தற்போது 27 மொழிகளில் இருந்து 96 சான்றளிக்கப்பட்ட பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு பின்னணி கொண்ட உரைபெயர்ப்பாளர்கள் உள்ளனர்” என்கிறார் அவர்.

சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் உரைபெயர்ப்பாளர் மாநாட்டில் கலந்து கொண்ட Lavinia, இந் நாட்டிற்குப் புதிதாகக் குடிவந்தவர்களும் பூர்வீகக் குடி மக்களுக்கும் ஒத்த கதைகளைப் பகிர்ந்து கொண்டதை அவதானித்தார்.

ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.




Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   






Do you have any questions or topic ideas? Send us an email to 






To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 



Share

Recommended for you