பாலியல் உறவில் இருதரப்பினரதும் சம்மதத்தை உறுதி செய்வது எப்படி?

SG Sexual Consent - YOUNG COUPLE

Although sexual assault is considered a major health and welfare issue in Australia, aspects of seeking, giving and denying sexual consent only became a mandatory element of the Australian National Curriculum from 2023. Source: Moment RF / Habitante Stock/Getty Images

ஆஸ்திரேலியாவில், நிஜ வாழ்க்கையிலோ அல்லது ஆன்லைனிலோ சம்மதமற்ற பாலியல் செயல்பாடு என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலுள்ள சட்டங்களின்படி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தாங்கள் உறவில் ஈடுபடுவதற்கு முன் சம்மதம் பெற்றதாக நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். எனவே, மற்றவரின் சம்மதத்துடன் நீங்கள் உறவு கொள்கிறீர்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது?


Key Points
  • பாலியல் வன்முறை என்பது தேவையற்ற அல்லது அழுத்தம் அல்லது மிரட்டல் காரணமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பாலியல் செயல்பாடும் ஆகும்.
  • பாலியல் வன்முறை என்பது உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ நடக்கலாம். இது நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இடம்பெறலாம்.
  • சில ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளில் பாலுறவுக்கான சம்மதச் சட்டங்களை வலுப்படுத்துவது என்பது பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் இருதரப்பும் உறுதியான சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும்.
  • பாலுறவுக்கான ஒப்புதல் பெறுவதையும் உட்படுத்தும்வகையில் ஆஸ்திரேலிய கல்வி முறை அதன் பாடத்திட்டத்தை மேம்படுத்துகிறது.
பாலியல் வன்முறை என்ற வார்த்தையானது "உங்களுக்கு பயமாக அல்லது சங்கடமாக இருக்கும்" எந்தவொரு பாலியல் செயலையும் விவரிக்க பயன்படுத்தப்படலாம் என 1800 ரெஸ்பெக்ட் ஹெல்ப்லைன் என்று அழைக்கப்படும் Australian National Domestic Family and Sexual Violence Counselling Service கூறுகிறது.

பாலியல் வன்முறை என்பது பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம், வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு வன்முறை என்ற சொல், உடல் ரீதியான ஆக்கிரமிப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் நேரில் அல்லது ஆன்லைன் போன்ற உடல் சாராத வழிகள் மூலம் ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளவியல் தீங்குகளையும் இது குறிக்கும்.
SG Sexual Consent - STOP
On average, there are 85 sexual assaults reported every day in Australia. 90 per cent of victim-survivors do not report their rape to police. Source: Moment RF / Carol Yepes/Getty Images
ஆஸ்திரேலியாவில் ஐந்தில் ஒரு பெண் 15 வயதிலிருந்தே பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் (ABS) தரவுகள் காட்டுகின்றன.

பாலியல் வன்கொடுமை என்பது விருப்பத்திற்குமாறான நெருக்கம் அல்லது நெருங்கிய தொடர்பு என வரையறுக்கப்படுகிறது என்று கூறுகிறார் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் மற்றும் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் விக்டோரியா பொலிஸாரின் துப்பறியும் நிபுணர் குழுவை வழிநடத்தும் Senior Sergeant Monique Kelley.

பாலியல் வன்முறை கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. சமீபத்திய வருடங்களில், சில ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளில் பாலியல் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாம் சம்பந்தப்பட்ட நபரின் சம்மதத்தைப் பெற்றிருந்தார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென்பதாக, சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
புலனாய்வுப் பத்திரிக்கையாளர் Jess Hill, ‘Asking for it’ என்ற மூன்று பாகங்கள் கொண்ட ஆவணப்படத் தொடரில் பாலுறவுக்கான சம்மதம் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

ஒவ்வொரு நபரும் பாலியல் தொடர்புகளில் என்ன உணர்கிறார்கள் மற்றும் நன்றாக உணரவில்லை என்பதைக் கண்டறிவதே முதல் படியாகும் என்றும் நெருக்கமான செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் 'ஆம்' அல்லது 'இல்லை' என்று எப்படிச் சொல்வது என்பதை இருதரப்பும் கற்றுக்கொள்வது முக்கியம் எனவும் அவர் சொல்கிறார்.

பாலுறவுக்கான சம்மதத்தை உறுதிசெய்வது என்பது, இருவருக்கிடையிலான அனைத்து பாலியல் செயல்பாடுகளுக்கும் உற்சாகமான, உறுதியான ஒப்புதல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும்

பாலுறவுக்கான சம்மதத்தை உறுதிப்படுத்துவது என்பது ஒருவர் பாலியல் செயலுக்கு ஒப்புக்கொள்கிறார் என்று நினைப்பதை விட அதிகம்.

சில வகையான உடல் மொழிகளின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் 'இல்லை' என்று சொல்லாத காரணத்தினாலோ அவர்களின் சம்மதம் இருப்பதாகக் கருத முடியாது.

 'எனக்கு உறுதியாகத் தெரியவில்லை' என்று சொன்னால், மேலும் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் நிச்சயமற்றவர்களாக இருப்பது போல் தெரிந்தால், அவர்களிடமிருந்து தெளிவான கருத்தைப்பெற வேண்டும்.
SG Sexual Consent - couple enjoying a movie at the cinema
Credit: Flashpop/Getty Images
தகவல் அறிந்து சம்மதத்தை வழங்கக்கூடியவர்கள் யார் என்பதை சுற்றி இந்த எல்லைகள் உள்ளதாக வழக்கறிஞரும் எழுத்தாளருமான Michael Bradley கூறுகிறார்.

 பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணியாற்றியுள்ள இவர், பாலுறவுக்கான சம்மதத்தை வழங்க முடியாத தெளிவான நிகழ்வுகளை சட்டம் ஏற்கனவே நிறுவியுள்ளதாக கூறுகிறார்.

 எடுத்துக்காட்டாக, போதையில் இருந்தாலோ அல்லது சுயநினைவின்றி இருந்தாலோ, அல்லது மிகவும் தீவிர அறிவுசார் குறைபாடு உள்ள ஒருவரால் சம்மதம் கொடுக்க முடியாது. மேலும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சட்டப்படி ஒப்புதல் அளிக்க இயலாது என அவர் விளக்குகிறார்.
SG Sexual Consent - Problems in the relationship
Couple in a difficult moment Credit: Mixmike/Getty Images
இருப்பினும், பயம் அல்லது அழுத்தம் காரணமாக ஒப்புதல் அளிக்கப்படும் சூழ்நிலைகளில், சட்ட அமைப்பு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் சில சிக்கல் பகுதிகள் இருப்பதாகவும் Michael Bradley கூறுகிறார்.

இந்த ஆண்டு (2023) முதல் ஆஸ்திரேலிய தேசிய பாடத்திட்டத்தில் பாலியல் சம்மதத்தைப் பெறுவது, கொடுப்பது மற்றும் மறுப்பது ஆகிய அம்சங்கள் கட்டாய கூறுகளாக மாறியுள்ளன. பாலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக தடுப்பு பற்றிய தற்கால கருத்துக்கள் மீது போதுமான கவனம் இல்லை என்ற விமர்சனங்களையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டமானது வயதுக்கு ஏற்ற முறையில் சம்மதம் பெறுவது மற்றும் மரியாதைக்குரிய உறவுமுறைகளை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரம் ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர்பில் காணப்படும் பாரம்பரிய கலாச்சார எதிர்பார்ப்புகளில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் ஆராய்கிறது.
பல கலாச்சார பின்னணிகளில் உள்ளவர்கள் மத்தியில் காணப்படும் மனத்தடை மற்றும் பாலியல் பற்றி வெளிப்படையாக பேசுவதிலுள்ள தயக்கம் போன்றவை, பாலியல் ஆக்கிரமிப்பு மற்றும் பாலியல் மேலாதிக்கத்தை இயல்பாக்குகிறது என குடும்பம் மற்றும் பாலியல் வன்முறை தடுப்பு ஆகியவற்றில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும் கல்வியாளருமான Richie Hardcore சொல்கிறார்.

கொடுக்கப்பட்ட பாலுறவுக்கான சம்மதம் மீளப்பெறக்கூடியது என்பது தெரியாமல் அல்லது பாலுறவுக்கான சம்மதத்தைக் கேட்பதற்குப் பழக்கமில்லாமல் வளர்ந்துள்ள தலைமுறைக்கு இது தொடர்பில் கற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் Richie Hardcore இந்த உரையாடல்களை இயல்பாக்குவதன் மூலம் நிறைய தீங்குகளை குறைக்கலாம் எனத் தான் நினைப்பதாக கூறுகிறார்.
SG Sexual Consent - SEX online
SEX online Credit: JLGutierrez/Getty Images
இயல்பான விதத்தில் பாலுறவுக்கான சம்மதத்தை எப்படிக் கேட்பது என கற்றுக்கொள்வது என்பது, பாலினத்தைச் சுற்றி கலாச்சார ரீதியாக திணிக்கப்பட்ட கருத்துக்களை மறுகட்டமைப்பது, தவறான பாலின எதிர்பார்ப்புகளை மாற்றுவது, அத்துடன் பெண்மை மற்றும் ஆண்மை பற்றிய பழமையான கருத்துகளை உள்ளடக்கியது என புலனாய்வுப் பத்திரிக்கையாளர் Jess Hill சொல்கிறார்.

பெண்களும் ஆண்களும் தங்கள் சொந்த விருப்பத்தை எவ்வாறு நிலைநிறுத்துகிறார்கள் மற்றும் கட்டமைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் கற்றுக் கொள்ள நிச்சயமாக நிறைய இருக்கிறது எனவும், இதனால்தான் ஆம் என்று சொல்வது அல்லது இல்லை என்று சொல்வது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
SG Sexual Consent - Couple Having Sex On Bed At Home
Credit: Beatriz Vera / EyeEm/Getty Images
உங்களுக்கு உளநல ஆதரவு தேவைப்பட்டால், நீங்கள் 1800RESPECTஐ 1800 737 732 என்ற எண்ணிலும் Lifeline ஐ 13 11 14 என்ற எண்ணிலும் Beyond Blue ஐ 1800 22 46 36 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

premieres 8:30pm Thursday 20 April on SBS and SBS On Demand. The three-part series continues weekly.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share