ஆஸ்திரேலியாவில் கர்ப்பமடைந்த பெண்களில் சுமார் 40% திட்டமிடப்படாதவை. அவற்றில், ஏறத்தாழ 30% கருக்கலைப்பில் முடிவடைகிறது, அதில் பெரும்பாலானவை கர்ப்பமடைந்து 12 வாரங்களுக்கு முன்பே நிகழ்கின்றன.
பேராசிரியர் டேனியல் மஸ்ஸா மோனாஷ் பல்கலைக்கழகத்தின் General Practice தலைவர் ஆவார். முந்தைய கடுமையான கருக்கலைப்பு தொடர்பிலான சட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெரும்பாலான கருக்கலைப்புகள் அறுவை சிகிச்சை மூலம் தனியார் வசதிகளில் செய்யப்பட்டன. இப்போது அதற்கு மாற்றாக மருத்துவ ரீதியில் வழங்கப்படும் (medical termination) அணுகல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், தேவையான மருந்துகளை பரிந்துரைக்க 10% GP-க்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மேலும் இந்தச் சேவைகளுக்கான வழிகள் எப்பொழுதும் எளிதில் கிடைத்துவிடாது.
கருக்கலைப்பு சட்டம் மாநில அடிப்படையிலானது, எனவே நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து சிறிய வேறுபாடுகள் உள்ளதாகப் பேராசிரியர் மஸ்ஸா விளக்குகிறார்.
உங்கள் GPயின் பொறுப்புகள்
பெண்கள் அவர்களின் மருத்துவரிடம் பேசும்போது, எவ்வளவு கடினமான உரையாடலாக இருந்தாலும் பெண்களுக்கு கருக்கலைப்புச் சட்டங்கள் தொடர்பில் உரிமைகள் இருப்பதை உறுதி செய்கிறது.
இதேவேளை, புலம்பெயர்ந்த மற்றும் பலதரப்பட்ட பெண்கள் பெரும்பாலும் மருத்துவர்களைப் பார்க்கச் செல்லும்போது மருத்துவர் எப்படி நடந்துகொள்வார் என்ற கவலையை அவர்களுக்கு உருவாக்கலாம்.
ஒரு பெண் கர்ப்ப காலத்தின் எவ்வளவு காலத்தைக் கடந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் ஆரம்ப சோதனைகளை நடத்தலாம்.
உள்ளூர் சேவைகள் என்ன என்பதை உங்கள் GP அறிந்திருக்க வேண்டும் என்று டாக்டர் போயர்மா கூறுகிறார்.
என்னென்ன வகையிலான கருக்கலைப்பு முறைகள் கிடைக்கின்றன?
தற்போது இரண்டு வகையான கருக்கலைப்பு முறைகள் உள்ளன.
முதலாவது, வாய்வழியாகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மூலமான மருத்துவக் கருக்கலைப்பு. கர்ப்பமானது ஒன்பது வாரங்களுக்குக் குறைவாகவுள்ள பெண்களுக்கு மட்டுமே இந்த முறை பொருத்தமானது.
சில GPக்கள், தனியார் கிளினிக்குகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் மூலம் இந்த மருந்து வழங்கப்படுகிறது.
தூரப்பிரதேசப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு டெலிஹெல்த், தொலைபேசி அல்லது வீடியோ ஆலோசனை மூலம் மருந்து வழங்கப்படலாம்,

Credit: Getty/Catherine McQueen
கருக்கலைப்பு ஒரு day clinic அல்லது மருத்துவமனையில் லேசான மயக்க மருந்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
சேவைகளைப் பெறுவதற்கான வழிகள்
கருக்கலைப்புத் தொடர்பிலான சேவையைக் கண்டறிய, உங்கள் ஜிபியுடன் பேசலாம் அல்லது தேசிய அல்லது மாநில அடிப்படையிலான பரிந்துரை சேவைகளில் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம்.
குடும்பக் கட்டுப்பாடு மருத்துவசேவைகள் நாடு முழுவதும் பல்வேறு சேவைகளை வழங்குவதாக டாக்டர் போயர்மா கூறுகிறார்.

Credit: Getty/AJ Watt
- இவற்றில் ஒன்று , இது ஒரு இலவச, தேசிய 24 மணி நேர உதவிச்செவை ஆகும், இது ஒரு பதிவு செய்யப்பட்ட தாதியுடன் உங்களை இணைக்கிறது. 1800 022 222.
- குடும்பக் கட்டுப்பாடு தொடர்பிலான() கிளினிக்குகள் ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. குடும்பக் கட்டுப்பாடு NSW, எடுத்துக்காட்டாக, 15 வாரங்களுக்கு குறைவான கர்ப்பகால நோயாளிகளுக்கு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை கருக்கலைப்பு சேவைகளை வழங்குகிறது.
- விக்டோரியாவில், பெண்கள் இன் தகவல் சேவையை அழைக்கலாம். 1800 696 784
- NSW இல் உள்ளவர்கள் கர்ப்பம் தொடர்பிலான சேவையினைத் தொடர்பு கொள்ளலாம். : 1800 008
- பொது மருத்துவமனைகளில் குறைந்த அளவிலான கருக்கலைப்பு சேவைகளே வழங்கப்படுகின்றன.
கருக்கலைப்புக்கு எவ்வளவு செலவாகும்?
பெரும்பாலான கருக்கலைப்பு சேவைகள் தனியார் துறையில் வழங்கப்படுவதால், உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து அதற்குரிய கட்டணங்கள் மாறுபடும்.
கருக்கலைப்பு சேவைகளை வழங்கும் சில பல்கலைக்கழக சுகாதார மையங்களும் உள்ளன. சில மருத்துவமனைகள் மருத்துவ காப்பீட்டு அட்டையுடன் எந்த கட்டணமும் இல்லாமல் சேவைகளை வழங்குகின்றன. இல்லையெனில், நீங்கள் ஒரு தனியார் கிளினிக் மூலம் மருத்துவ கருக்கலைப்பு செய்ய விரும்பினால், மருந்துக்கு மட்டுமே $500 வரை செலவாகும்,
தனியார் சுகாதார காப்பீடுகள் கூட கட்டணங்களில் வேறுபடுகின்றன என்று Counselling Team Leader with Children by Choice Nicole Huig கூறுகிறார்.

Credit: Getty/milanvirijevic
கர்ப்பத்தின் ஒவ்வொரு சூழ்நிலையும் வெவ்வேறானதாகும். ஆகவே உங்கள் ஜிபியுடன் பேசுவது அல்லது உங்களுக்கு அருகில் உள்ள சேவையைத் தொடர்புகொள்வது முக்கியமாகும்.
State by state -மாநில ரீதியான தகவல்கள்
—————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்