காலாவதியாக உள்ள தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் உடனே செய்யவேண்டியவை

Reapply TPV

Source: SBS

மூன்று அல்லது ஐந்து ஆண்டு கால தற்காலிக பாதுகாப்பு விசா முடிவடையும் நிலையில் உள்ள அகதிகள் தங்களின் விசா முடிவடைவதற்குள் என்ன செய்ய வேண்டும் என அகதி ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் RACS வழக்கறிஞர் Allison Rayne . அகதி ஒருவருக்காக குரல் கொடுத்தவர் வசந்தி ரட்ணகுமார்.


TPV-தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் Shev விசாவில் உள்ளவர்கள் தமது விசா முடிவடைவதற்கு முன்னர் மீண்டும் பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத்தவறுபவர்கள் தமது விசா முடிவடைந்தபின் மீண்டும் பாதுகாப்பு கோரி விண்ணப்பிக்க முடியாது என்பதுடன் நாடுகடத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர் எனச் சொல்கிறார் Refugee Advice & Casework Service வழக்கறிஞர் Allison Rayne.

எனவே தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் Shev விசாவில் உள்ளவர்கள் தமது விசா எப்போது முடிவடைகிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் அதேநேரம் விசா முடிவடைய 6 மாதங்கள் இருக்கும்போதோ(அல்லது அதற்கு முன்பாகவோ) அதற்காக மீண்டும் விண்ணப்பிப்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

இதேவேளை மீண்டும் பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது 1505 என இலக்கமுடைய புதிய படிவத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் இதனைச் செய்வதற்கு முன்னால் உங்களது வழக்கறிஞர் அல்லது குடிவரவு முகவரின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது எனவும் Allison Rayne வலியுறுத்தியுள்ளார்.

இதுதவிர தற்காலிக பாதுகாப்பு விசா மற்றும் Shev விசாவில் உள்ளவர்கள் அதற்கு மீண்டும் விண்ணப்பித்திருக்கும் காலப்பகுதியில் வெளிநாடு சென்றுவரலாமா? மற்றும் இவ்விசாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளுக்கு என்ன நடக்கும் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதிலைக் கண்டடைய மேலுள்ள ஒலிக்கீற்றை செவிமடுங்கள்.

Refugee Advice & Casework Service-இன் உதவியைப் பெற விரும்புபவர்கள் 02 8355 7227 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம். அல்லது 2 Darcy Road Westmead என்ற முவரியிலுள்ள அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிவரை அல்லது 44A Macquarie Road Auburn என்ற முவரியிலுள்ள அலுவலகத்திற்கு புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணிவரை நேரடியாகச் செல்லலாம்.

 


Share