Key Points
- பூர்வீகக்குடி சமூகங்களின் வரலாற்றைப் பற்றி உங்களைப் பயிற்றுவிக்கவும், பூர்வீகக்குடி அல்லாத மக்களுடன் அவர்கள் கொண்டிருந்த உறவுகளைப் புரிந்து கொள்ளவும்.
- நீங்கள் வசிக்கும் நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும்.
- அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்கள் சிறந்த முறையில் பூர்வீகக்குடி மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
பூர்வீகக்குடி மக்களுக்காக குரல் கொடுப்பவர் அல்லது ஆதரவளிப்பவராக இருக்க விரும்புபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் உள்ளன.
பூர்வீகக்குடியினம் அல்லாதவர்கள் பூர்வீகக்குடி மக்கள் பற்றி கற்பது அவசியம் என்கிறார் யோர்டா யோர்டா பெண், Dr Summer May Finlay.
ஒரு ஆதரவாளர் என்பவர் தங்களைப் பயிற்றுவிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்பவர், ஆகவே Reconciliation Australia அல்லது உங்கள் மாநிலத்தின் நல்லிணக்க சபைகளை நீங்கள் தொடர்பு கொள்வது உண்மையில் நல்ல தொடக்கப் புள்ளியாகும் என்கிறார் Dr Summer May Finlay.
Dr Summer May Finlay.
நீங்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் குடியேறியவரா என்பது முக்கியமில்லை, நீங்கள் பூர்வீகக்குடி மக்களுடன் நல்ல உறவை உருவாக்க விரும்பினால், அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் அவர்களுக்கு நடந்த விடயங்கள் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது மற்றும் ஆஸ்திரேலியர்களாக இருந்த அவர்களின் அனுபவங்களை பாதிக்கிறது, என்பதை புரித்துக்கொள்வதே உண்மையில் நல்ல தொடக்கப்புள்ளி என்றும் மேலும் கூறுகிறார் Karen Mundine.
நீங்கள் வசிக்கும் நிலத்தின் பூர்வீகக்குடி மக்களை பற்றி தெரிந்து கொள்வது அவர்கள் பேசும் மொழி மற்றும் அந்த மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ள பூங்காக்கள் பற்றி தெரித்துக்கொள்வது உங்களையும் வளப்படுத்தும் மேலும் அது பூர்வீகக்குடி மக்களுடனும் உங்களை இணைக்கும். நீங்கள் வசிக்கும் நிலத்தின் பூர்வீகக்குடி மக்களை பற்றி தெரிந்து கொள்ள உங்களின் உள்ளூர் கவுன்சில் நகர சபையை நீங்கள் நாடலாம் என்கிறார் Karen Mundine.
CEO of Reconciliation Australia, Karen Mundine Credit: Reconciliation Australia Credit: Joseph Mayers/Joseph Mayers Photography
பூர்வீகக்குடி மக்களின் வரலாற்றைக் கற்றுக்கொள்வதற்கு முன், முதலில் எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
நேர்மறையான மாற்றத்தில் ஒவ்வொருவரும் பங்கு வகிக்க முடியும் என்று கூறும் Luke Pearson குரல் கொடுப்பவர் அல்லது ஆதரவு அளிப்பவர் என்பது தான் தவிர்க்கும் ஒரு சொல் என்று கூறுகிறார்
“அந்தச் சொற்கள் எனக்குப் பிடிக்காததற்குக் காரணம், பூர்வீகக்குடி மக்களின் நீதிக்கான காரணத்திலிருந்து பூர்வீகக்குடியினம் அல்லாதவர்களை மையப்படுத்த முயற்சிப்பதாகும். எனவே, நீங்கள் உதவி செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் நல்லது, ஆனால் உங்களுக்கு ஒரு லேபிள் அல்லது ஸ்டிக்கர் தேவையில்லை. நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது குறிக்கோள் அல்ல; பூர்வீகக்குடி மக்களின் நலனை மேம்படுத்துவதே குறிக்கோள்" என்று மேலும் கூறுகிறார் Luke Pearson.
Founder of Indigenous X platform, Luke Pearson
தாங்கள் கடந்து வந்த அனுபவங்களை கொண்டு அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்கள் சிறந்த முறையில் பூர்வீகக்குடி மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று Reconciliation Australia இன் தலைமை நிர்வாகி Karen Mundine கூறுகிறார்.
பூர்வீகக்குடி அல்லாத சமூகங்கள் தங்கள் சமூகப் பிரதிநிதிகளை பூர்வீகக்குடி அமைப்புகளை முறையாக ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்வது முக்கியம் என்று தான் நினைப்பதாகவும் தேவாலயங்கள், கோயில்கள், மசூதிகள் ஆகியவற்றில் பூர்வீகக்குடி மக்களை பேச அழைக்குமாறு வலியுறுத்துமாறும் Karen Mundine மேலும் கூறுகிறார்
பல பூர்வீகக்குடி மக்கள் புலம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் சவால்களை ஆதரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று Karen Mundine கூறுகிறார்
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற பூர்வீகக்குடி மற்றும் Torres Strait தீவு மக்களின் விவகாரங்களை பாதிக்கும் அரச கொள்கைகள் மற்றும் சட்டங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் Indigenous Voice to Parliament என்ற கட்டமைப்பு குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு பூர்வீகக்குடி மக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஆழமாக ஆராயவும் நல்ல வாய்ப்பை வழங்கியது, அத்துடன் உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் அளித்தது.
அதைத் தொடர்ந்து செய்வது நவீன ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்று Ms Mundine கூறுகிறார்
READ MORE
பூர்வீகக் குடிமக்கள் கதை: பாகம் 11
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.