தற்போதுள்ள இறுக்கமான வாடகைச் சந்தையில் வீடொன்றைத் தேடுவது ஒரு வேலை நேர்காணலைப் போலவே தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வாடகை portal, rent.com இன் CEO Greg Bader
ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதில் உள்ள சவால்களை அவர் புரிந்துகொள்கிறார்.
சில வாடகை முகவர்களும் நிலச்சொந்தக்காரர்களும் இளைஞர்களுக்கு வீட்டைக் கொடுக்க விரும்புவதில்லை எனவும் ஒருவரது முன்னைய வாடகை வரலாற்றை அவர்கள் பார்க்க விரும்புவதால் புதிதாக நாட்டிற்கு வந்திருப்பவர்களுக்கு வீடு கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும் Greg Bader கூறுகிறார்.

The number of available rental properties has almost halved compared to two years ago. Source: iStockphoto / mikulas1/Getty Images/iStockphoto
பெரும்பாலான வீடுகள் , மற்றும் போன்ற தளங்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன, மேலும் வீட்டைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் மற்றும் வாராந்திர வாடகை விலை ஆகியவை இத்தளங்களில் கிடைக்கும்.
வீட்டைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் வழக்கமாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை இருக்கும் என்பதையும், வார நாட்களைவிட வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்.
ஆஸ்திரேலியா முழுவதும் 800,000க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் உள்ளனர். இருப்பினும், விண்ணப்ப செயல்முறை வெவ்வேறுபட்டவையாகும்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகள் அல்லது சட்டங்கள் இல்லை என்றபோதிலும் விண்ணப்பதாரிகள் தமது அடையாளத்தை நிரூபிக்கும்வகையிலான ஆவணங்கள், வேலைவாய்ப்பு மற்றும் வருமானச் சான்று, முந்தைய நில உரிமையாளர்களிடமிருந்து கடிதம் மற்றும் வாடகை வரலாறு போன்ற அம்சங்களை சமர்ப்பிக்கவேண்டியிருக்கும் என Greg Bader விளக்குகிறார்.

It is important to speak to the realestate agent directly before applying for a rental property. Credit: andresr/Getty Images
முன்னைய வாடகை வரலாற்றிற்கான ஆதாரம் உங்களிடம் இல்லையென்றால், ஒரு முகவர் கருத்தில் கொள்ளும் பிற அம்சங்கள் உள்ளன.
உதாரணமாக மெல்பனைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் மற்றும் சிறு வணிக உரிமையாளரான Nick நீண்ட காலத்திற்குப் பிறகு வாடகைச் சந்தைக்குள் நுழைந்திருந்ததால் தனது நிலைமையை விளக்கி, அறிமுகக் கடிதத்துடன் தனது உள்ளூர் முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறுகிறார்.
Nick தனது சொந்த வியாபாரத்தை நடத்துவதால் தனது வருமானத்தை நிரூபிக்கும் ஆதாரமாக tax return தகவல்களை வழங்க முடிந்தது.
இந்த வழியில் நேரடியாக முகவர்களைத் தொடர்புகொள்வது ஒரு வாடகை வீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோலாக இருக்கும்.

The number of available rental properties has almost halved compared to two years ago. Source: iStockphoto / chameleonseye/Getty Images/iStockphoto
பல செயலிகள் மற்றும் இணையத்தளங்கள் பயன்பாட்டில் இருப்பதால், உங்கள் விவரங்களைப் பல இணையதளங்களில் பதிவேற்ற சிறிது நேரம் செலவிட வேண்டியிருக்கும்.
வெற்றிகரமான விண்ணப்பதாரராக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ரகசியம், விண்ணப்பிக்கும் முன் முகவருடன் பேசுவதாகும் என Greg Bader பரிந்துரைக்கிறார்.
சிறு வணிக உரிமையாளரான Nick தனது அடுத்த வாடகை சொத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்காமலேயே கண்டுபிடித்தார்.
தனது முகவருடன் நேரடியாகப் பேசியதாகவும், தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரிடம் தனக்குப் பொருத்தமான மற்றொரு வீடு இருந்ததால் உடனடியாகவே அதற்கு மாறக்கூடியதாக இருந்ததாகவும் Nick சொல்கிறார்.
இதேவேளை முக்கிய வாடகை இணையதளங்களைத் தேடுவதற்கு மாற்று வழிகள் இருப்பதாக ஒப்புக்கொள்ளும் rent.com.auஇன் CEO Greg Bader சமூக வலைத்தளங்களில் வாடகை வீடுகள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றபோதிலும் அதனூடாக மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கிறார்.
தொலைபேசியில் மட்டும் பேசி எதையும் ஒப்புக்கொள்ளாதீர்கள் எனவும் உறுதிசெய்யாமல் பணம் கொடுக்க வேண்டாம் எனவும் Greg Bader வலியுறுத்துகிறார்.
நீங்கள் எந்தப் பகுதியில் வசிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்தவுடன், உங்கள் சமூகத்துடன் இணைவதும் உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்துவதும் பயனுள்ளதாக இருக்கும்.
பிஸான் ரஹிமி மெல்பனின் வடக்கில் உள்ள Love & Co ரியல் எஸ்டேட்டின் வாடகைப் பிரிவின் தலைவராக உள்ளார்.
தனது உள்ளூர் Farsi மொழி பேசும் சமூகத்துடன் நெருக்கமாக இணைந்து மொழி மற்றும் கலாச்சார தடைகளை நீக்கி மக்களுக்கு வீடுகளைக் கண்டறிய உதவுவதாக அவர் சொல்கிறார்.
Adult Multicultural Education Services (or AMES) போன்ற சமூக நலன் சார்ந்த சேவைகளும் திரு ரஹிமியை வாடகை வீடு தேடும் புதிய நபர்களுடன் இணைக்கின்றன.
புதியவர்களிடமிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தனக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது எனவும் அவர்களின் பின்னணியை அறிவதும், அவர்களது மொழியைப் பேசுவதும் தனக்கு பெரும் உதவியாக இருப்பதாவும் அது முழு வாடகைச் செயன்முறையையும் மிகவும் சீராக ஆக்குகிறது எனவும் ரஹிமி சொல்கிறார்.
rent.com.au போன்ற வாடகை தொடர்பான இணையத்தளங்கள் வாடகை சொத்துக்களைப் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் வழங்குகின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.