ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை குடும்ப வன்முறையும் பாலியல் வன்முறையும் முக்கிய உடல்நலம் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆணிவேராக இருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் ஐந்தில் இருவர் 15 வயதிலிருந்தே உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவிப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சமீப காலம் வரை, குடும்ப வன்முறை சமூகப் பிரச்சனையாக அல்லாமல் ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதப்பட்டது,
ஆனால் ஆஸ்திரேலியாவில் பலர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.

Source: Getty / In Pictures Ltd./Corbis via Getty Images
குடும்ப வன்முறை என்பது சிறுவர் வன்கொடுமை, முதியோர் வன்கொடுமை உட்பட பல வடிவங்களில் இடம்பெறலாம் என தெற்கு ஆஸ்திரேலியாவின் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் குடும்ப வன்முறை தொடர்பான நிபுணர் Dr Nada Ibrahim கூறுகிறார்.
குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் பெண்களாவர்.
வன்முறையைப் பற்றி நாம் பேசும்போது, அது வெறும் உடல் சார்ந்தது அல்ல. வன்முறையானது உளவியல் ரீதியான வன்கொடுமை, நிதி ரீதியான வன்கொடுமை, துன்புறுத்தல் அல்லது கட்டாயக் கட்டுப்பாடு உட்பட பல வடிவங்களை எடுக்கலாம்.
சிலர் இன்னும் வன்முறை பற்றிய காலாவதியான கருத்துக்களைக் கொண்டுள்ளனர் எனவும் உடல் ரீதியான வழிமுறைகளுக்கு அப்பால் வாய்மொழி ரீதியான வன்கொடுமை, உளவியல் ரீதியான வன்கொடுமை உள்ளிட்டவற்றை அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை எனவும் Dr Nada Ibrahim கூறுகிறார்.
சில சந்தர்ப்பங்களில், மத நம்பிக்கைகள் அல்லது குடும்பத்தின் அழுத்தங்கள் குடும்ப வன்முறை சூழலை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம்.

Blurred sad boy leaning open hand against glass door. Credit: E+
Kulturebrille என்ற அமைப்பு கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட பின்னணிகொண்டவர்களிடையே குடும்ப வன்முறை தடுப்பு மற்றும் பிற சிக்கல்களில் சிறப்பாக செயற்பட நிறுவனங்களுக்கு உதவுகிறது.
புலம்பெயர்வின் அழுத்தங்கள் சில சமயங்களில் குடும்ப வன்முறைக்கு ஒரு ஊக்கியாக மாறலாம் என Kulturebrille இயக்குநர் அனு கிருஷ்ணன் எச்சரிக்கிறார்.
குடும்ப வன்முறை யாரையும் பாதிக்கலாம் என்ற நிலையில் இதுகுறித்து உதவி பெற வேண்டிய போது புலம்பெயர் பின்னணிகொண்ட பெண்கள் கூடுதல் தடைகளை எதிர்கொள்கின்றனர். எனவே குடும்பவன்முறை பற்றி வெளிப்படையாகப் பேசுவது சரியென்று அவர்களிடம் சொல்வது உட்பட சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி பாதிக்கப்படும் பெண்ணுக்கு உதவ முன்வர வேண்டும் என அனு கிருஷ்ணன் ஊக்குவிக்கிறார்.
குடும்ப வன்முறை தடுப்பு என்பது முழு சமூகமும் ஈடுபடும் போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
விசா சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு தங்கள் துணையை சார்ந்து இருப்பது மற்றும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எங்கு செல்வதென்று தெரியாதிருப்பது போன்றவை காரணமாக புலம்பெயர் பின்னணிகொண்ட பல பெண்கள் குடும்பவன்முறைக்கெதிராக உதவி பெற தயங்குகின்றனர் என அனு கிருஷ்ணன் விளக்குகிறார்.
இதேவேளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளில் ஆண்களும் சேர்க்கப்படுவது மிகவும் முக்கியமானது என்று AMES ஆஸ்திரேலியா அமைப்பின் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தடுப்புத் திட்டத்தின் மூத்த மேலாளர் Wendy Lobwein கூறுகிறார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் புலம்பெயர் பின்னணிகொண்ட பெண்களுக்கு உதவ தற்போது பல சேவைகள் உள்ளன.
இவற்றில் பல மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து அனைத்து மொழிகளிலும் ஆதரவை வழங்குகின்றன.
நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவித்தால், இதை உங்கள் GP க்கு தெரிவிக்கலாம், அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களைப் பரிந்துரைக்கலாம்.
ஆனால் நீங்கள் உடனடியாக ஆபத்தில் இருந்தால், 000 இலக்கத்தை அழைக்க தயங்கக்கூடாது என்று Wendy Lobwein வலியுறுத்துகிறார்.
உதவி எங்கே கிடைக்கும்:
நீங்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரேனும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால் உதவியைப் பெற 1800 RESPECT ஐ அழைக்கலாம்.
உங்களுக்கு உளவள ஆதரவு தேவைப்பட்டால், Lifeline- ஐ 13 11 14இல் அல்லது 1800 22 46 36 இல் Beyond Blue ஐ தொடர்புகொள்ளலாம்.
உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் தேவைப்பட்டால், 13 14 50 ஐ அழைக்கவும்.
SBS Original thriller series Safe Home premieres with a double episode on Thursday 11 May at 8.30pm on SBS and .
Safe Home is a gripping drama that looks at the stories behind the headlines of the family violence epidemic. The people behind the numbers, the stories behind the statistics
கூடுதல் உதவிகள்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது