ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளில் குடியேற ஊக்குவிப்பு

International students in Armidale Source: SBS
தற்காலிக குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகரித்து வருகிறது என்பதை அண்மையில் அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை சுட்டிக்காடுகிறது. அதன் தாக்கம் குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதே வேளை, தாம் தேர்தலில் வெற்றி பெற்றால், பெரு நகரங்களில் மக்கள் நெரிசலைக் குறைப்பதற்காக, ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதிகளில் புதிதாகக் குடி வருபவர்கள் வாழ்வதற்கும் அங்கு பணியாற்றவும் புதிய ஊக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அரசு உறுதியளித்துள்ளது. ஏற்கனவே பிராந்திய நியூ சவுத் வேல்ஸில் வசிக்கும் குடிவந்தவர்களும், பெரு நகரங்களிலிருந்து வெகுதூரத்தில் வாழ்வதில் பல நன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள். அதற்கு அரசும் ஊக்கம் கொடுப்பதை அவர்கள் வரவேற்கிறார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து Rosemary Bolger, Sunil Awasthi மற்றும் Michelle Rimmer ஆகியோர் எழுதிய விவரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share