மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது நேயர்கள் அறிந்த செய்தி.
டார்வினில் எங்கே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தும் அவரது குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்றும், இன்று காலை பிரியாவிடமிருந்து அறிந்து கொண்டார் குலசேகரம் சஞ்சயன்.
அதைத் தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன், இந்தக் குடும்பம் எதிர்வரும் புதன்கிழமை வரை ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த காணொளி:
இந்த முடிவு குறித்தும் பிரியா தன் கருத்துகளை, பதிந்துள்ளார்.