2022 தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய வேட்பாளர் David Pocock-இன் படம் பரவலாகப் பரப்பப்பட்டது.
அதில் அவர் தனது சட்டை பொத்தானைக் திறந்து கிரீன்ஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளிப்படுத்துவது போல் காட்டப்பட்டது.
ஆனால் ACT-இன் சுயாதீன செனட்டர் David Pocock ஒருபோதும் கிரீன்ஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருந்த David Pocock -இன் அந்த படத்தின் கீழ், பழமைவாத அரசியல் lobby குழுவான Advance Australia-ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்று சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்திடம் Pocock முறைப்படி ஒரு புகாரை பதிவு செய்தார். அரசியல் விளம்பரச் சட்டங்கள் மீறப்படவில்லை என்று Advance Australia குழு பதிலளித்தது.
ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த விளம்பர படங்கள் தவறாக வழிநடத்துவதாகவும், அவற்றைக் காட்டக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
Digitally altered flyers of Alex Dyson, authorised by Advance Australia, were placed in voter's mailboxes throughout the candidate's electorate of Wannon. Credit: Supplied
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல தவறான துண்டுப்பிரசுரங்கள் வாக்காளர்களின் தபால் பெட்டிகளில் போடப்பட்டன.
அதில் ஒன்றில் Alex தனது சட்டையைக் கிழித்து கிரீன்ஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் கொண்ட டி-சர்ட்டைக் காட்டும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட படம் இடம்பெற்றிருந்தது.
இது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுவதாக கூறுகிறார் சுயேச்சை வேட்பாளர் Alex Dyson
குறிப்பாக 2022-ஆம் ஆண்டு இதே போன்று David Pocock-இன் விளம்பர படங்கள் குறித்து ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் AEC எடுத்த முடிவுக்குப் பிறகு, இது எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்று AEC-யிடம் கேட்ட டைசனுக்கு ஆச்சரியப்படும் வகையில் பதில் கிடைத்துள்ளது. இவவகையான விளம்பரங்கள் முற்றிலும் சட்டபூர்வமானது என்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
Monash Law School-இல் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் Yee-Fui Ng.
Alex Dyson இடம்பெற்றுள்ள இந்த விளம்பர படங்கள் சட்டரீதியான ஒன்று தான் என்று கூறுவது தேர்தல் சட்டங்களில் உள்ள இடைவெளியை வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.
Alex Dyson இடம்பெற்றுள்ள இந்த புதிய துண்டுப் பிரசுரங்கள் பிப்ரவரி மாதத்தில் விநியோகிக்கப்பட்டதால் - அதாவது தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு விளம்பரப்படுத்தப்பட்டதால் இது தவறல்ல என்று AEC தெரிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தின் பிரிவு 329, ஒரு வாக்காளர் வாக்களிப்பதில் தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் தகவல்களை வெளியிடுவதைத் தடை செய்கிறது.
ஆனால் இந்த சட்டம் தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே பொருந்தும் என்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் விளங்கப்படுத்துகிறது.
தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைநகரமான ACT-யில் அரசியல் விளம்பரங்கள் கட்டாயம் உண்மை கொண்டதாக இருக்கவேண்டும். இந்த நடைமுறை நாட்டின் மற்றைய பகுதிகளிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
மேலதிக தலைப்பு விவரணங்களுக்கு sbs.com.au/sbsexamines-ஐ பார்வையிடவும்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.