பெற்றோருக்கான நிரந்தர விசா - தாமதத்தை எப்படித் தவிர்க்கலாம்?

Parents Visa.jpg

While Permanent Parent Visa waiting periods are typically very long, recently they have become even longer Source: SBS

ஆஸ்திரேலியாவுக்கான பெற்றோர் நிரந்தர விசாவுக்கான விண்ணப்பதாரிகள் சுமார் 30 தொடக்கம் 50 வருடங்கள் வரை காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் பெற்றோர் விசா அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமாறு அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. வருடாந்தம் 8,500 பெற்றோர் விசா இடங்களுக்காக சுமார் 130,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இதனால் எந்தத் தீர்வும் இல்லாமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் அதேவேளை விண்ணப்பக் கட்டணங்களுக்காக ஆயிரக்கணக்கான டொலர்களும் அவர்களுக்கு செலவாகியுள்ளது. இதன் பின்னணியில், வேறு என்ன வழிகளில் விரைவாகப் பெற்றோரை இங்கு அழைத்து வரலாம் என்பது உட்படப் பல தகவல்களை எமக்களிக்கிறார், சிட்னியில் சட்டத்தரணியாகப் பணியாற்றிவரும் தமிழரசன் செல்லையா அவர்கள். அவருடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share