SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
TM கிருஷ்ணாவுக்கு “சங்கீதகலாநிதி” பட்டம் தரலாமா? தரக்கூடாதா?
![TMK.jpg](https://images.sbs.com.au/dims4/default/1984d58/2147483647/strip/true/crop/960x540+0+0/resize/1280x720!/quality/90/?url=http%3A%2F%2Fsbs-au-brightspot.s3.amazonaws.com%2Ffb%2F1e%2F65f6104f4abc9dc70ff04afaa482%2Ftmk.jpg&imwidth=1280)
கர்நாடக இசையின் தலைமையகம் என்று கருதப்படும் சென்னை மியூசிக் அகாடமி பிரபல பாடகர் TM கிருஷ்ணாவுக்கு கர்நாடக இசை உலகின் மிக உயரிய விருதான “சங்கீத கலாநிதி” விருதை தரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு சில கர்நாடக இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு, விருதுவழங்கும் விழாவை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த சர்ச்சை ஆஸ்திரேலியாவிலும் பிரதிபலிக்கும் பின்னணியில் TMK விருது பெறுவதை எதிர்க்கும் கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி பரத் மற்றும் TMK யை ஆதரிக்கும் கர்நாடக இசை ஆர்வலர் பார்த்திபன் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share