பாலியல் கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியதாக இருக்க வேண்டுமா?
Family Planning ஆஸ்திரேலியாவின் சுகாதார மேம்பாட்டு மேலாளர் Ee-Lin Chang.
பாலர் பள்ளி முதல் ஆண்டு 12 வரை, பாலியல் கல்வி ஆஸ்திரேலியாவில் பாடசாலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஆனால் பிள்ளைகள் பாலியல் கல்வி குறித்து பொருத்தமாக கற்றுக்கொள்வது பற்றி அடிக்கடி விவாதம் எழுந்து வருகிறது என்று SBS Examines-இடம் கூறினார்
மோனாஷ் பல்கலைக்கழகத்தில் School of Education, Culture and Society-இன் இணைப் பேராசிரியர் Fida Sanjakdar. ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வி ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது என்கிறார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய பாடத்திட்டம் தற்போது ஐக்கிய நாடுகள் சபையால் பரிந்துரைக்கப்பட்ட 'விரிவான பாலியல் கல்வி'யின் சில கூறுகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது, இருப்பினும் அவை தெளிவற்றதாகவும் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் புரிந்துக்கொள்வதாகவும் உள்ளன.
கலாச்சாரம் மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட பின்னணியில் உள்ளவர்கள் உட்பட ஆஸ்திரேலியாவில் விரிவான பாலியல் கல்வியை அடைய, பாடத்திட்டம் அனைவருக்கும் இடமளிக்க வேண்டும் என இணைப் பேராசிரியர் Sanjakdar தெரிவித்தார்.
Edith Cowan பல்கலைக்கழகத்தில் School of Education-இன் மூத்த விரிவுரையாளர் டாக்டர் டேவிட் ரோட்ஸ்.
ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் கல்வி சீரற்றதாக உள்ளது என்கிறார்.
இளைஞர்கள் தங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பது பற்றி அறிய ஆசைப்படுகிறார்கள். அதனை பாடசாலைகள் கற்பிக்கப்படாவிட்டால், அவர்கள் வேறு எங்காவது தெரிந்துக்கொள்ள போகிறார்கள் என்று டாக்டர் ரோட்ஸ் தெரிவித்தார்.
SBS Examines-இன் இந்த நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் பாலியல் கல்வியை ஆராய்கிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.