இருப்பினும் ஆஸ்திரேலியாவிலுள்ள தேசிய வனப்பகுதிகள் மற்றும் பாரிய பூங்காக்கள் எவ்வளவு பரந்தவை என்பதுடன் இதற்குள் தொலைந்து போவது எவ்வளவு எளிது என்பதை பலரும் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
இப்படியாக தொலைந்துபோனநிலையில் ஆஸ்திரேலியாவில் தினமும் ஒரு bushwalker மீட்கப்படுகிறார்.
நீங்கள் ஏற்கனவே உள்ள பாதைகளில் நடந்தாலும் அல்லது தொலைதூர வனப்பகுதி வழியாக நடந்தாலும், சிறிது திட்டமிடலுடன் செல்வதன் மூலம் ஆபத்துகளைத் தவிர்க்கவும், bushwalkingகின் அனைத்து நன்மைகளையும் அனுபவிக்கவும் முடியும்.
இதேவேளை bushwalking போகும்போது காணாமல் போகின்றவர்களில் 95 வீதமானோர் 12 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
இதன் பின்னால் இருப்பவர்கள் Caro Ryanபோன்றவர்கள்.
NSW SES Bush Search and Rescueவில் Deputy Unit Commander ஆக Caro Ryan இருக்கிறார்.
Bushwalking செய்யும் போது, தேவையான பொருட்களை எடுத்துச்செல்வது, நீங்கள் எங்கு bushwalking செல்கிறீர்கள் என்ற திட்டங்களைப் பற்றி உங்களது நண்பர்களுக்கோ அல்லது வேண்டப்பட்டவர்களுக்கோ தெரிவிப்பது, நீங்கள் செல்லும் பாதைபற்றி நன்கு அறிந்திருப்பது மற்றும் அவசர நிலைமையின்போது தொடர்புகொள்ளக்கூடிய வசதியைக் கொண்டிருப்பது ஆகியவற்றை நினைவில் கொள்ள வேண்டுமென Caro Ryan வலியுறுத்துகிறார்.

Preparedness will increase the likelihood of being found. Credit: pixdeluxe/Getty Images
உங்களோடு கொண்டுசெல்லக்கூடிய பொருட்களின் பட்டியல் இது
- Food including snacks like nuts and chocolate
- Water – one litre for every three hours
- Clothing layers in bright colours
- Hat and sunscreen
- Comfortable shoes such as joggers or hiking boots for harsher terrain
- Raincoat
- Map and compass if you know how to navigate, or download a navigation app onto your phone
- First aid kit

It's also vital to let other people know your plans. Credit: visualspace/Getty Images
உங்களுடன் முதலுதவி பெட்டியை கொண்டுசெல்ல மறக்காதீர்கள்.
அத்துடன் உங்கள் திட்டங்கள் என்ன என்பதை உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.
National Parks and Wildlife Service, பொலிஸ் அல்லது நம்பகமான நண்பர் என எவருக்கேனும் உங்கள் திட்டத்தை தெரிவிக்கலாம்.
மேலும், emergency beacon ஒன்றை உங்களுடன் எடுத்துச் செல்வது நீங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து உதவிக்கு ஆட்கள் வருவதை இலகுவாக்கும்,
Emergency beacons
சில வெளிப்புற கடைகள் மற்றும் தேசிய பூங்கா அலுவலகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களுக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்தும் இந்த சாதனங்களை நீங்கள் வாடகைக்கு எடுக்கலாம்.
இதுதவிர நீங்கள் இலவச யும் பதிவிறக்கலாம். இது செயல்பட Mobile reception தேவை என்றாலும், இது நீங்கள் இருக்கும் இடம்பற்றிய தகவலை வழங்கும் அதேநேரம் உதவிக்கு ஆட்களை அழைக்க உங்களுக்கு உதவும்.

If you don’t have an emergency beacon, try your best to make yourself visible. Credit: Nicole Bordes
அதேநேரம் எங்கே எந்தப்பாதையில் bushwalking செல்கிறீர்கள் என்பதை உங்கள் உடல்நிலை மற்றும் உடல்தகுதி ஆகியவற்றுக்கேற்ப தீர்மானிக்கலாம்.
இப்படியெல்லாம் கவனமாக திட்டமிட்டாலும், bushwalking செல்லும் பலர் தொலைந்து போகத்தான் செய்கிறார்கள்.
இப்படியான சந்தர்ப்பம் எழுந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
முதல் விடயம், ஒரு இடத்தில் உட்கார்ந்து உங்களை அமைதியாக்கி ஆசுவாசப்படுத்துப்படுத்திக் கொள்வதாகும்.
வந்தவழியைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் சிறிது தூரம் திரும்பிச்செல்லவேண்டியிருக்கலாம். அப்படிச் செல்லும்போது அந்த வழியில் ஏதாவது அடையாளக்குறிகளை இட்டுச்செல்லலாம்.
அதேநேரம் உங்களிடம் emergency beacon இல்லையென்றால், புதர்களுக்குமத்தியில் நீங்கள் தெளிவாகத் தெரியும் இடமொன்றில் இருப்பதற்கு முயற்சிசெய்யலாம்.

Around 95 per cent are found within 12 hours by SES Bush Search and Rescue. Credit: Raoul Wegat/Getty Images
உங்களிடம் இருக்கும் பொருட்களை ஒரேயடியாக முடித்துவிடாமல் சிறிது கையிருப்பையும் வைத்துக்கொள்ளுங்கள். உதவிக்காக காத்திருக்கும் போது அவை உங்களுக்குத் தேவைப்படலாம்.
இருப்பினும், நீங்கள் bushwalking செல்வதற்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம்.
குறிப்பாக முதலுதவி படிமுறைகளை தெரிந்துகொள்வது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கவனித்துக் கொள்ள சிறந்த வழியாகும்.
அதுமட்டுமல்லாமல் bushwalking கிளப்பில் சேர்வது உங்களுக்கு பல பயன்களைக் கொண்டுவரும்.

Joining a bushwalking group is a great idea to explore Australia's nature. Credit: andresr/Getty Images
Resources
- For bushwalking clubs and safety information across Australia visit .
- You can register your bushwalk plans with .
- Caro Ryan’s
- Caro Ryan’s – Day Hike
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.