கேப்டன் ஜேம்ஸ் குக் முதன்முதலில் ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படும் கடற்கரைக்கு வந்தபோது, இந்த பரந்த நிலத்தை “Terra Nullius” என்று அறிவித்தார், இது யாருடைய நிலம் அல்ல. உண்மையில், ஆஸ்திரேலியா தீவுக் கண்டம் நூற்றுக்கணக்கான வெவ்வேறு பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் Islanderகளின் தாயகமாக இருந்தது.
இதுவே Frontier போர்களுக்கு தூண்டுதலாக அமைந்தது, அதாவது பூர்வீகக்குடி மக்களுக்கும் காலனித்துவ குடியேற்றக்காரர்களுக்கும் இடையிலான மிருகத்தனமான மோதல்கள் . ஆனால் இந்த கொடூரமான வரலாறு இப்போதுதான் அங்கீகரிக்கத் தொடங்குகிறது.
பிரிட்டிஷ் குடியேறியவர்களிடமிருந்து தங்கள் நிலங்களைப் பாதுகாக்கும் பூர்வீகக்குடி மக்களின் போராட்டத்தின் தன்மையை விவரிக்கும் ஒரு ஆவணத் தொடரை திரைப்படத் தயாரிப்பாளர் Rachel Perkins சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
The Australian Wars செப்டம்பர் 21 புதன்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு SBS மற்றும் NITV இல் திரையிடப்படுகிறது
ஆங்கிலத்தில் Claudianna Blanco எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
—————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.