SBS Examines : ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?

Patient using wheelchair moving in hospital courtyard

Migrants with disability are exposed to health screening processes that could impact their ability to stay in Australia. Source: iStockphoto / Vukasin Ljustina/Getty Images

மாற்றுத்திறனாளிகள் வன்முறை, முறைக்கேடு, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் உள்ளிட்ட பாகுபாடு மற்றும் ஓரங்கட்டலை எதிர்கொண்டதாகக் 2023 - ஆம் ஆண்டில் ராயல் கமிஷன் விசாரணையில் கண்டறியப்பட்டது.


புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளர்களுக்கு அந்த சவால்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பிறகு Mark Tonga மாற்றுத்திறனாளர்களுக்காக வாதிடுவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்வதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

புலம்பெயர்ந்த சமூகங்களில் உள்ள மாற்றுத்திறனாளர்களின் உண்மையான வெற்றிக் கதைகளை பார்க்கவோ கேட்கவோ இல்லை என்றால், அவர்கள் தங்கள் மனப்பான்மையை ஒருபோதும் மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்று மேலும் கூறுகிறார் Speak My Language disability திட்டத்தின் தேசிய திட்ட மேலாளர் Vanessa Papastavros.

மாற்றுத்திறன் அல்லது நாள்பட்ட சுகாதார நிலைமைகள் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு மற்றொரு தடை உள்ளது.

குடிவரவு விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் சுகாதார மதிப்பீட்டைச் மேற்கொள்ள வேண்டும்.

Autism, Down syndrome, cystic fibrosis, காசநோய் அல்லது HIV positive உள்ளிட்ட குறிப்பிடத்தக்க செலவு வரம்பு உட்பட பல நிபந்தனைகளை விண்ணப்பதாரர்கள் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவு சுகாதாரத் தேவைகள் New Zealand மற்றும் கனடா போன்ற பிற நாடுகளை விட கடுமையானவை.

மாற்றுத்திறனாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை அங்கீகரிக்கும் செயல்முறையை மறுபரிசீலனை செய்ய மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ராயல் கமிஷன் பரிந்துரைத்தது.





SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share