முதலுதவி பயிற்சி பெற்றவர்களின் விகிதம் மிகக்குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பதாக 2017 ஆம் ஆண்டில், செஞ்சிலுவைச் சங்கம் கண்டறிந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 60,000 பேர் குழந்தைகள்.
Royal live saving societyயின் மதிப்பீடுகளின்படி, சராசரியாக, ஒவ்வொரு நாளும் 20 ஆஸ்திரேலியர்கள் மாரடைப்பால் இறக்கின்றனர். அத்துடன் முதலுதவி சிகிச்சை தேவைப்படும் 60 சதவீத காயங்கள் வீட்டிலேயே ஏற்படுவதாகவும் அது கண்டறிந்துள்ளது.
இதேவேளை பணியிடமொன்றில் ஏற்படும் அவசரநிலையின்போது, முதலுதவி வழங்குவது தொடர்பில் மூன்றில் ஒருவருக்கும் குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்களே நம்பிக்கையுடன் உள்ளனர்.
பெரும்பாலானவர்கள் தமது வேலைக்குத் தேவைப்படாவிட்டால் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வதில்லை என்றாலும்கூட, முதலுதவிபற்றி கற்றுக்கொள்வது பல பயன்களைக் கொண்டுவரும் என்கிறார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக Paramedicக்காக கடமையாற்றுபவரும், மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் Paramedicine விரிவுரையாளராகவும் உள்ள Buck Reed.

Australian estimates suggest that less than one in three employees feels confident to perform first aid in a workplace emergency.
மருத்துவ அவசரநிலையொன்று ஏற்படும்போது ஆம்புலன்ஸை வரவழைப்பது மற்றும் உரிய மருத்துவசேவையைப் பெறுவதற்கு முன்னராக பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றுவதற்கான அல்லது அவர் உயிர்வாழ்வதற்கான அதிக வாய்ப்பை உருவாக்குவதே முதலுதவி வழங்குவதன் நோக்கமாகும் என்கிறார் Buck Reed.
முதலுதவி பயிற்சி வகுப்புகள் cardiopulmonary resuscitation அதாவது CPR மற்றும் defibrillator உபகரணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மக்களுக்குக் கற்பிக்கின்றன.
இவை இரண்டும் உயிர்காப்பதில் உதவக்கூடிய மிக முக்கியமான அம்சங்கள் ஆகும்.
CPR பயிற்சியானது Australian Resuscitation Council (ARC) நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட வேண்டும் என்று Buck Reed கூறுகிறார்.
CPR என்பது முதலுதவிக்கான சிறந்த நடைமுறையை ஒழுங்குபடுத்தும் உச்ச அமைப்பாகும். இது College of Emergency Medicine, Council of Ambulance Authorities மற்றும் live saving போன்ற அமைப்புகள் உட்பட சுமார் 20 உறுப்பினர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.

There were over 26,000 out-of-hospital cardiac arrests in Australia in 2019. It is estimated that 75% of cardiac arrests occur at home or in a private setting.
இவற்றில் St John மிகப்பெரிய நிறுவனம் எனவும் இதுதவிர செஞ்சிலுவைச் சங்கம், Surf live saving, Royal live saving உள்ளிட்ட பல அமைப்புகளும் முதலுதவியை கற்பிக்கின்றன என அவர் சொல்கிறார்.

First aid training courses typically incorporate classroom simulations to prepare trainees to deal with emergency situations.
பெரும்பாலான முதலுதவி படிப்புகள் நேரில் கற்பிக்கப்படுகின்றபோதிலும், சில அம்சங்களை இணையவழி ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம்.
நேரிலும் இணைவழியிலும் என இரண்டும் கலந்து மேற்கொள்ளப்படுகின்ற முதலுவி வகுப்புகள் பலரது விருப்பத்தெரிவாகவும், அவர்களுக்கு இலகுவாகவும் உள்ளதாக கூறுகிறார் பிரிஸ்பேனில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் First Aid Regional Area Lead Deb Lowe.

Some training providers offer one or more modules of first aid courses in video or webinar mode.
முதலுதவி கற்கைநெறிகளுக்கான கால அளவு வேறுபடுகின்றது. சில இரண்டு மணிநேரம் முதல் இரண்டு நாட்கள் வரை எடுக்கின்றன. சில கற்கைநெறிகள் தேசிய அங்கீகாரம் பெற்றவை, மற்றவைக்கு கிடையாது.
சில அலுவலக சூழல்களுக்கு ஏற்றது, மற்றவை வெளிப்புற பணியிடங்களுக்கு ஏற்றவை.
பயிற்சி பெறுபவர்களும் பணியிடங்களும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு அவர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் Paramedicகாக கடமையாற்றுபவரும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் Paramedicine விரிவுரையாளராகவும் உள்ள Buck Reed.

Many organisations hold community first aid courses. Ask your doctor or maternal and child health nurse for more information.
மக்கள் தங்கள் தேவைகளுக்கு சரியான கற்கைநெறியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என வலியுறுத்துகிறார் Buck Reed.

It is estimated that only 5% of Australians have a current first aid certificate.
Further resources
- For health advice and first aid information, including resources and where to undertake training visit
- Australian Red Cross has a with first aid and CPR instructions
- St John Ambulance has a range of to basic first aid in common emergencies, translated in Arabic, Traditional Chinese, Greek, Italian and Vietnamese.
- Visit the Raising Children Network for first aid information for , , and .
In an emergency, call triple zero (000) and ask for an ambulance. The person on the line will help you provide first aid.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.