இந்த ஆண்டு உங்களின் tax return இல்லாமல் போவதற்கு வாய்ப்பு?

Capture.JPG

Why might your tax refund disappear this year? Source: AAP / Prabaharan Maheswaran

ஆஸ்திரேலிய வரி அலுவலகம் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் பேரின் கடன்களை வசூலிப்பதை மீண்டும் செயல்படுத்தியுள்ள பின்னணியில், இந்த ஆண்டு இலட்சக்கணக்கான மக்கள் reduced tax return - குறைந்த வரியினையே திரும்பப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. 2020 Black Summer காட்டுத்தீ அனர்த்தம் மற்றும் கோவிட்-19 தொற்று ஆகியவற்றின் காரணமாகக் கடன்களை வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் இப்போது ATO, தமக்குச் சேரவேண்டிய கடன்களில் குறைந்தபட்சம் $274 மில்லியன் டாலர்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதன் பின்னணி மற்றும் பல தகவல்களை எமக்களிக்கிறார் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பெர்த் நகரில் வசித்துவரும் கோவிந்தராஜன் அப்பு, ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு Accounting and Tax Public Practice நிறுவனம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். அவரோடு உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share