வருடத்துக்கு மூன்றரை லட்சம் வெளிநாட்டவர்களை உள்வாங்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு பரிந்துரை!

skill migrant

Source: AAP

கோவிட் பரவலினால் மந்தநிலையை அடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தினை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்கு, ஆஸ்திரேலியா அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு வருடமும் மூன்றரை லட்சம் வேலையாட்களை உள்வாங்கவேண்டும் என பிரபல நிறுவனமான KPMG தனது ஆய்வறிக்கையில்  பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு உள்வாங்கப்படும் வெளிநாட்டு வேலையாட்களினால் ஆஸ்திரேலியப் பொருளாதாரத்துக்கு சுமார் 120 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என்பதற்கு அப்பால், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியும் 4.4 வீதமாக உயர்வடையும் என்றும் KPMG நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோவிட் கட்டுப்பாடுகளினால் எல்லைகள் மூடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களைக் கடந்திருக்கும் ஆஸ்திரேலியா, வெளிநாட்டவர்களின் வருகையை பெருமளவில் இழந்துள்ளதுடன், பலர் பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு படையெடுப்பதாக  சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

சுமார் 145 நாடுகளில் கிளைகளைக் கொண்ட பல்தேசிய நிறுவனமான KPMG, கணக்கியல், வரி, நிதி ஆலோசனை என்று பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக சேவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 5 January 2022 12:53am

Share this with family and friends