2022-இல் ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்களில் கொண்டுவரப்படும் மாற்றங்கள்!

பிறந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் விசாக்கள் தொடர்பில் சில சட்டங்கள் அல்லது அம்சங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

The policy changes have been made to streamline new pathways to permanent residency, especially to address skill shortages in Australia.

A representative image of Australian visa and passport. Source: Getty Images

  • 2021-2022 நிதியாண்டில் புதிதாக நாட்டில் குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 160,000 என்ற அளவிலேயே தொடர்ந்தும் இருக்கும். இதில் Family reunion stream-க்கென 77,300 இடங்களும் Skill stream-க்கென 79,600 இடங்களும், Special Eligibility மற்றும் சிறுவர்களுக்கென 3100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 2022-23 நிதியாண்டில் புதிய குடிவரவாளர்களின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில் இது 235,000 ஆக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், சர்வதேச மாணவர்கள், குறிப்பிட்ட வகை skilled விசா உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் தற்போது நாட்டிற்குள் வர அனுமதிக்கப்படுகின்றனர். அதேநேரம் ஆஸ்திரேலிய குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் வருவதற்கு விதிவிலக்கு அனுமதிபெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஆஸ்திரேலியாவிற்கான Temporary Graduate (subclass 485)  விசாக்களை வைத்திருந்தவர்கள் எல்லைக்கட்டுப்பாடு காரணமாக இங்கு வரமுடியாத நிலை காணப்பட்ட பின்னணியில், இவர்களது விசா கடந்த 2020 பெப்ரவரி மாதம் 1ம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ காலாவதியாகியிருந்தால், அவர்கள் மீண்டும் subclass 485 விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். அவர்களது முன்னைய விசா எந்தளவு காலப்பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததோ, அதேயளவு காலப்பகுதிக்கு இவ்விசாவை மீண்டும் பெறமுடியும். புதிய மாற்றீட்டு விசாவுக்கு 1 ஜுலை 2022 முதல் விண்ணப்பிக்கலாம்.
  • Temporary Graduate subclass 485 விசாவில் இங்கு வரும் Masters by Coursework graduates, ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் காலம், 2 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக அதிகரிக்கப்படுகிறது.
  • கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு தீர்மானித்த சில குறிப்பிட்ட பிரிவு skilled migrants, நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பது இலகுவாக்கப்பட்டுள்ளது. Temporary Skill Shortage (subclass 482) short-term stream மற்றும் Temporary Work Skilled (subclass 457) ஆகிய விசாக்களில் இருந்தவர்கள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • ஆஸ்திரேலியாவிலுள்ள ஹொங்கொங் நாட்டவர்கள் subclass 189 (Hong Kong Skilled Independent Stream) மற்றும் subclass 191 (Hong Kong Regional Stream) ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தகுதிபெறுகின்றனர். மார்ச் 2022 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
  • தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் நியூசிலாந்து நாட்டவர்கள் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிடம் பெறுவதை இலகுவாக்கும் வகையில் New Zealand stream of the Skilled Independent (Subclass 189) விசாவில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • குடிவரவுச் சட்டத்தின் Section 48 bar-ஆல் பாதிக்கப்பட்டிருந்தவர்களும் 190, 491 அல்லது 494 ஆகிய பிரிவு skilled migration விசாக்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டே விண்ணப்பிப்பதற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது. CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற இத்திட்டமூடாக சமூக அமைப்புகள், சமய அமைப்புகள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 1500 அகதிகளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தமுடியும்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 6 January 2022 5:34pm
Updated 6 January 2022 5:47pm
Presented by Renuka

Share this with family and friends