ஆஸ்திரேலிய விசா தொடர்பில் அரசு அறிவித்துள்ள முக்கிய சலுகை!

Australian Visa

Source: Getty Images

கொரோனா பரவலையடுத்து மூடப்பட்டிருந்த ஆஸ்திரேலிய எல்லைகள் தற்போது திறக்கப்படுகின்ற பின்னணியில், விசா தொடர்பிலான புதிய அறிவிப்பு ஒன்றை அரசு விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கான தற்காலிக விசாக்களை வைத்திருந்த பலர் எல்லைக்கட்டுப்பாடு காரணமாக இங்கு வரமுடியாத நிலை காணப்பட்டது.

இப்படியானவர்களில் Temporary Graduate (subclass 485) விசா வைத்திருந்தவர்களும் அடக்கம்.

இவர்களது விசா கடந்த 2020 பெப்ரவரி மாதம் 1ம் திகதியன்றோ அல்லது அதற்குப் பின்னரோ காலாவதியாகியிருந்தால், அவர்கள் மீண்டும் subclass 485 விசாவிற்கு விண்ணப்பிக்க முடியுமென குடிவரவு அமைச்சர் Alex Hawke அறிவித்தார்.

அவர்களது முன்னைய விசா எந்தளவு காலப்பகுதிக்கு வழங்கப்பட்டிருந்ததோ, அதேயளவு காலப்பகுதிக்கு இவ்விசாவை மீண்டும் பெறமுடியும்.

முன்னதாக subclass 485 விசாவுக்கு விண்ணப்பித்த ஒருவர் மீண்டும் அதே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாதிருந்த பின்னணியில், அரசு தற்போது இந்த சலுகையை வழங்குகின்றது.

Temporary Graduate subclass 485 விசா வைத்திருந்த சுமார் 30 ஆயிரம் பேர், ஆஸ்திரேலியா திரும்பமுடியாமல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் அரசின் இப்புதிய அறிவிப்பு மூலம் பயனடையவுள்ளனர்.

புதிய மாற்றீட்டு விசாவுக்கு 1 ஜுலை 2022 முதல் விண்ணப்பிக்க முடியும்.

அதேநேரம் Temporary Graduate subclass 485 விசாவில் இங்கு வரும் Masters by Coursework graduates ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படும் காலம், 2 வருடங்களிலிருந்து 3 வருடங்களாக அதிகரித்தல் உட்பட இன்னும் சில மாற்றங்களையும் அரசு அறிவித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு உள்துறை அமைச்சின் பார்வையிடவும்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 25 November 2021 4:30pm
Updated 25 November 2021 4:34pm

Share this with family and friends