பெர்த்தில் இந்தியச் சிறுமி மரணம்: சிகிச்சைக்காக 2 மணிநேரம் காத்திருந்ததாக தகவல்!

Channel 9

Source: Nine Network

பெர்த் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்தியப்பின்னணி கொண்ட சிறுமியொருவர் அங்கு 2 மணிநேரமாக காத்திருந்ததாகவும், சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு சிலமணி நேரங்களுக்குள் அவர் மரணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெர்த்தின் Morley பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான ஐஸ்வர்யாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காய்ச்சல் அதிகரித்ததையடுத்து பெர்த் சிறுவர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார்.

அங்கு சுமார் 2 மணிநேரங்கள் ஐஸ்வர்யா காத்திருந்ததாகவும், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைவிடுத்த போதிலும் அவர்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை எனவும் தாயாரான பிரஷிதா சசிதரன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் ஐஸ்வர்யாவை பார்வையிட்டபோது அவரது நிலைமை மிகமோசமடைந்திருந்ததாகவும் சிகிச்சை ஆரம்பித்து சிலமணி நேரங்களுக்குள் ஐஸ்வர்யா மரணமடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் ஐஸ்வர்யா உயிரிழந்திருக்க மாட்டார் எனவும் மருத்துவமனையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் தமது மகளை இழந்துவிட்டதாகவும் தந்தையார் முரளிதரன் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Roger Cook உத்தரவிட்டுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Share
Published 6 April 2021 5:29pm

Share this with family and friends