உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த நீங்கள் செய்யக்கூடிய 5 விடயங்கள்

உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பராமரிப்பதில் பல நன்மைகள் உள்ளன. மேலும் அவ்வாறு செய்ய இயலாதநிலை, உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கும்.

Mind Your Health

Mind Your Health Source: iStockphoto / DisobeyArt/Getty Images/iStockphoto

உடற்பயிற்சி மற்றும் சிறந்த உணவுப் பழக்கவழக்கம் ஆகியன நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நீங்கள் தினசரி அடிப்படையில் செய்யக்கூடிய இரண்டு விடயங்கள் என்கிறார் Physical Activity & Health பேராசிரியர் Anne Tiedeman.

இவற்றுடன்கூட, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல், புகைபிடிப்பதைக் குறைத்தல் மற்றும் சமூகத்துடன் இணைந்திருப்பது ஆகியவையும் அடங்கும்.

1. உடல் செயல்பாடு

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வயதான காலத்தில் நோய் வருவதையும் தடுக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என பேராசிரியர் Tiedeman கூறுகிறார்.

இன்று அல்லது இந்த வாரம் ஒரு நபர் என்ன செய்கிறார் என்பது நீண்டகாலப்போக்கில் நன்மை பயக்கும் எனவும் அவர் விளக்குகிறார்.
ஒரு நபர் எவ்வளவு உடல் செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து, பேராசிரியர் Tiedeman ஐ சுட்டிக்காட்டுகிறார். இது வயது மற்றும் ஒரு நபருக்கு நாள்பட்ட நோய் அல்லது குறைபாடு உள்ளதா என்பதைப் பொறுத்து பரிந்துரைகளை வழங்குகிறது.
"உடல் செயல்பாடுகளின் முக்கிய செய்தி என்னவென்றால், நாம் எந்த வயது அல்லது இயலாமை நிலையில் இருந்தாலும் சரி, அது அனைவருக்கும் நல்லது" .
“மேலும், வழிகாட்டுதல்களில் பரிந்துரைக்கப்பட்ட உடல் செயல்பாடுகளின் அளவை உங்களால் சந்திக்க முடியாவிட்டாலும், எந்த அளவு உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடு நன்மை பயக்கும் என்பதையும், நீங்கள் தற்போது செய்வதை விட சற்று அதிகமாகச் செய்தால் அது பலன் தரும் என்பதையும் தெளிவான ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அறிவோம்".

உடல் செயல்பாடு பல்வேறு வடிவங்களில் அமையலாம். அது கட்டமைக்கப்பட்ட ஒரு விளையாட்டாக அல்லது உடற்பயிற்சி குழுவாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் விளக்குகிறார்.

"இது உங்கள் ஓய்வு நேரத்தில் வெளியில் நடந்து செல்வதாக இருக்கலாம், அல்லது உங்கள் வீட்டு வேலைகள், வீட்டைச் சுற்றியுள்ள செயல்பாடுகள் மற்றும் தோட்டக்கலையாக இருக்கலாம். இவை அனைத்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன."

2. சரியான உணவுப் பழக்கவழக்கம்

நீண்ட கால நோய் ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்கும், உடல் பருமனின் அபாயத்தைக் குறைப்பதற்கும், சரியான உணவுப் பழக்கவழக்கம் முக்கியம் என்று பேராசிரியர் Tiedeman கூறுகிறார்.

உங்கள் உணவில் நல்ல ஊட்டச்சத்து இருப்பது, உங்கள் உடலுக்கு சக்தியை அளிக்கவும், எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், உற்சாகமாக உணரவும் உதவுகிறது.

"சமச்சீர் உணவை உண்ணுதல், அதிகம் பதப்படுத்தப்படாத உணவு மற்றும் அதிக சர்க்கரை இல்லாத உணவை உட்கொள்ளுதல் போன்றவை மிகவும் முக்கியமானவை"

உணவு வகைகள் மற்றும் அளவுகள், உணவுப்பிரிவுகள் மற்றும் உணவு முறைகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றது.

இது ஐந்து உணவுப் பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான சத்தான உணவுகளை அனுபவிப்பதை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், கொழுப்பு, உப்பு, சர்க்கரை மற்றும் மது ஆகியவற்றைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்துகிறது.

3. உங்கள் மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும்

"பல நோய்களுக்கான ஆபத்து காரணிகளில் நமது வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்" என்று பேராசிரியர் Tiedeman கூறுகிறார். எனவே மதுவைக் கட்டுப்படுத்துவது மற்றும் புகைபிடிப்பதைக் குறைப்பது அவசியமாகும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மதுப்பழக்கம் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் இறப்புகளுக்கு பங்களிக்கிறது.

Australian Institute of Health and Welfare (AIHW) தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் 1,452 மதுவினால் தூண்டப்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலான இறப்புகள் ஆண்களில் சம்பவித்துள்ளன.

2020 இல் திருத்தப்பட்ட மது அருந்துவதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

மேலும், மதுப்பழக்கத்தை முறியடிக்க 12 உதவிக்குறிப்புகளை- Cancer Council பரிந்துரைக்கிறது. இதில் மது அருந்தாத நாட்களை சேர்த்துக்கொள்வது மற்றும் உங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீரைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

புகைபிடித்தல் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 20,500 ஆஸ்திரேலியர்களைக் கொல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஒட்டுமொத்த இறப்புகளில் 13 சதவீதம்) மற்றும் 2018 இல் ஆஸ்திரேலியாவின் மொத்த நோய் சுமைகளில் 8.6 சதவீதத்திற்கு காரணமாக இருந்தது.

இது ஒரு நபரின் ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

4. சமூக தொடர்பை வைத்திருத்தல்

சமூகத்தில் தனிமை என்பது ஒரு "பெரிய பிரச்சனை" என்று பேராசிரியர் Tiedeman கூறுகிறார், மேலும் ஒரு நபர் மற்றவர்களால் சூழப்பட்டிருந்தாலும் கூட அது நிகழலாம்.

தன்னார்வத் தொண்டு மற்றும் சமூகத்தில் சுறுசுறுப்பாக இருப்பது உட்பட பல வழிகளில் இணைப்பை அடைய முடியும் என்று அவர் கூறுகிறார்.
"ஒரு குழுவின் பகுதியாக இருக்கும் மற்றவர்களுடன் சமூக தொடர்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக தன்னார்வத் தொண்டு இருக்க முடியும். மற்றும் நிறைய பேர் குழு அடிப்படையிலான விளையாட்டு மிகவும் நல்லது என்று கருதுகின்றனர்".
இருப்பினும், சிலர் தனியாக இருப்பதை அனுபவிக்கிறார்கள் என்று அவர் விளக்குகிறார்.

"இந்த நபர்கள் தனியாக இருந்தாலும் அவர்கள் வேறு வழிகளில் சமூகத்தொடர்பைக் கொண்டுள்ளனர்."

Skype, Zoom, FaceTime மற்றும் House Party போன்ற appகள், வீடியோ அரட்டை மூலம் மக்களை குழுக்களாக இணைக்க அனுமதிக்கும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமூக ரீதியாக இணைந்திருப்பதற்கான நடவடிக்கைகளை Beyond Blue பரிந்துரைக்கிறது.

book club, trivia night, family dinners, dance parties அல்லது நண்பர்களுடன் மாலை நேர அரட்டைகள் உள்ளிட்ட வழக்கமான சந்திப்புகளை திட்டமிடவும் இந்த அமைப்பு பரிந்துரைக்கிறது.

5. உங்களது மற்றும் நீங்கள் அக்கறை காட்டும் நபர்களின் நலன்களை சரிபார்த்தல்

கோவிட் தொற்றுநோய்களின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை, உங்களையும் நீங்கள் பராமரிப்பு வழங்கும் நபர்களையும் ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று பேராசிரியர் Tiedeman கூறுகிறார்.

நமது அன்புக்குரியவர்களின் நலனைப்பற்றி விசாரிக்கும் அதேநேரம் நம்மைநாமே விசாரித்துக்கொள்வதும் அவசியமாகும்.

உதாரணமாக, முடக்கநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் வயதான பெற்றோருக்கு தேவையானதை அவர்கள் பெற்றுள்ளதை நாம் உறுதிசெய்வோம். ஆனால் நாங்கள் நிறைய மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் சுமக்கிறோம் என்பதை நாம் அடிக்கடி உணர்வதில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

எனவே, உங்களை நீங்களே சரிபார்த்து, உங்கள் சொந்த நலனுக்காக நல்ல விடயங்களைச் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியம்.

ஒரு நபர் தனது உணர்வுகள், உடல், தூக்கம் மற்றும் எண்ணங்கள் உட்பட, அவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பில் வாரந்தோறும் சரிபார்க்க வேண்டிய ஆறு விடயங்களின் பட்டியலை பரிந்துரைக்கிறது.

நெருக்கடிநிலையின்போது உதவி தேவைப்படுபவர்கள் Lifelineஐ 13 11 14 இல் தொடர்பு கொள்ளலாம், Suicide Call Back சேவையை 1300 659 467இல் மற்றும் Kids Helpline ஐ 1800 55 1800இல் (5 முதல் 25 வயதுடையவர்களுக்கு) தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல் மற்றும்  இல் கிடைக்கிறது.

கலாச்சார மற்றும் மொழியியல் ரீதியாக வேறுபட்ட பின்னணியில் உள்ள மக்களுக்கு உதவுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 6 October 2022 11:51pm
Updated 7 March 2023 11:43am
Source: SBS


Share this with family and friends