124 வருடங்களுக்குமுன் நிறுவப்பட்டதும் மேற்கு ஆஸ்திரேலிய அரசுக்குச் சொந்தமானதுமான Perth Mint (நாணய வார்ப்பகம்) நமக்குப் புழக்கத்திற்குத் தேவையான நாணயங்களை மட்டுமல்லாமல் gold மற்றும் silver bars- தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகளையும், collectors coins என்ற சிறப்பு நாணயங்களையும் ஞாபகார்த்த நாணயங்களையும் தயாரிப்பதோடு தங்கம் வெள்ளி என்பவற்றை வாங்குதல், விற்றல், ஏற்றுமதி செய்தல் என்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். அதற்கு Gold Corporation என்ற பெயரும் வர்த்தக வட்டாரங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
Gold rush என்று அழைக்கப்படும் 1900 ஆம் காலப்பகுதியில் பெருமளவு தங்கம் அகழ்ந்தெடுக்கப்பட்ட அவற்றை தங்கக் காசுகளாக வார்த்தெடுக்கும் நோக்கத்தில் இந்த வார்ப்பகம் நிறுவப்பட்டது. இங்கிலாந்தில் இருந்த Royal Mint இன்கிளையாக ஆரம்பிக்கப்பட்ட Perth Mint, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தேவையான முழு மற்றும் அரை சவரின் பொற்காசுகளைத் தயாரித்தது.

Gold images and samples of a Gold pour photographed at The Perth Mint in Perth, Wednesday, April. 24, 2013. Source: AAP / THERON KIRKMAN/AAPIMAGE
உலகில் அகழ்ந்தெடுக்கப்படும் தங்கத்தை சுத்தப்படுத்தி தங்கப்பாளங்களாக்கும் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றான Perth mint நிறுவனம் மிகப் பெரிய tourist attraction -உல்லாசப்பயணிகள் வந்து பார்வையிடும் நிலையமாகவும் இருக்கிறது.
இங்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த மிகப்பெரிய gold nuggets கள் மட்டுமல்ல 1000 கிலோ சுத்தமான தங்கத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய பொற்காசும் biggest gold coin என்பனவும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம் சுத்திகரிக்கப்பட்டு நாணயமாக வடித்தெடுக்கும் செய்முறை இங்கு செய்து காட்டப்படுகிறது.

Supplied undated image obtained Friday, Jan. 17, 2014 of Perth Mint CEO Ed Harbuz with the largest coin in the world. Credit: AAP Image/ROSS SWANBOROUGH/PR IMAGE
தங்கச்சுரங்கங்களின் செயல்பாட்டுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் Perth mint 312 டன் தங்கத்தையும் 247 டன் வெள்ளியையும் Covid தொற்று காலத்தில் கூட அதாவது 2020 இல் கூட ஏற்றுமதி செய்திருக்கிறது. உலகில் தங்கம் உற்பத்திசெய்யும் பெரிய நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
Perth mint இல் தயாரிக்கப்படும் தங்கக் கட்டிகளின் தரம் உலக அளவில் மிகச்சிறந்ததாகும். ஆஸ்திரேலிய Perth Mint bullion களுக்கு தரத்தைப்பொறுத்த அளவில் பெரிய மரியாதை உண்டு. ஆனால் அண்மையில் அது சீனாவில் Shanghai Gold Exchange -தங்கச்சந்தைக்கு அனுப்பிய 900 கோடி டாலர் பெறுமதியான 100 டன் தங்கம், தரத்தில் சற்று குறைந்திருந்ததாகவும் இது Perth mint இற்கு ஏற்கனவே தெரியும் என்றபோதும் அதை அந்த நிறுவனம் மூடிமறைத்துள்ளதாகவும் தற்போது கசிந்துள்ள internal report -நிறுவன உள்ளக அறிக்கை தெரிவிப்பதாக பரபரப்பான தகவல்கள் வந்திருக்கின்றன.
தரம் குறைந்திருந்தது என்று சொல்கிறபோது அளவுக்கு அதிகமாக கலப்படம் செய்யப்பட்டிருந்தது என்று பொருள்கொள்ள முடியுமா என்று நாம் யோசிக்கலாம். சர்வதேச வர்த்தகத்தைப் பொறுத்த அளவில் தங்கத்தின் அளவு 99.99 சதவீதமாக இருக்கவேண்டும். Perth mint சீனாவுக்கு அனுப்பிய தங்கத்திலும் தங்கத்தின் அளவு 99.99 சதவீதமாகவே இருந்தது. இது சர்வதேச தரத்தையே உடையது என்றபோதும் சீனாவில் Shanghai Gold Exchange ஐப் பொறுத்த அளவில் 99.99 சதவீதமான தங்கம் மட்டும் இருந்தால் போதாது. மிகுதி 0.01 சதவீத த்தில் எவ்வளவு வெள்ளி மற்றும் செம்பு இருக்கிறது என்பதை Shanghai Gold exchange மிக உன்னிப்பாக கவனிக்கும்.
இதன்படி Perth mint செய்த பரிசோதனைகளில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த தங்கத்தில் சர்வதேச தரமான 99.99 சதவீத தங்கம் இருந்தபோதும், மீதி 0.01 வீத த்தில் வெள்ளியும் செம்பும் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டபோதும் அதை மூடி மறைத்து தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.
இப்படி வெள்ளி செம்பு என்ற உலோகங்கள் அதிகமாக சேர்க்கப்படுவதை gold doping என்று இந்த தொழிலுள்ளவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலதிக லாபம் பெறுவதற்காகவே இப்படிச் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. 100 டன் தங்கம் ஏற்றுமதியானால் அதில் 0.01 வீதம் என்பது 10 கிலோவாகும். இந்த பத்து கிலோ தங்கத்திற்கு பதிலாக வெள்ளி போன்ற உலோகத்தைச் சேர்க்கும்போது உறபத்தியாளருக்கு பெருமளவில் லாபம் கிடைக்கும். மிகுதி 0.01 சதவீத த்தில் மாசுகள் இருக்கலாம் என்பது சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இது சட்டவிரோதமானதல்ல என்றபோதும், Shanghai Gold Exchange ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்திற்கு குறைவானதாகும். இதனால் Shanghai சந்தைக்கு அனுப்பப்பட்ட 900 கோடி டாலர் பெறுமதியான 100 டன் தங்கத்தையும் recall என்ற முறையில் திருப்பிப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Perth mint இவ்வாறான gold doping நடவடிக்கைகளில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Gold images and samples of a Gold pour photographed at The Perth Mint in Perth, Wednesday, April. 24, 2013. Source: AAP / THERON KIRKMAN/AAPIMAGE
நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது இதன் காரணமாக Perth mint இன் reputation -நன்மதிப்பு பெருமளவில் பாதிக்கப்படும் என்றே பார்க்கப்படுகிறது. Perth mint இல் இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் எவ்வளவு தூரம் தரத்தைப்பொறுத்த அளவில் நம்பகமானவை என்ற கேள்விகள் வாடிக்கையாளர்களிடமிருந்து எழக்கூடும்.
Perth mint ஐப் பொறுத்த அளவில் வேறு சர்ச்சைகளும் அவ்வப்போது இடம்பெற்றே வந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு Papua New Guineaயிலிருந்து, மரணதண்டனை பெற்ற ஒரு நபரின் சுரங்கத்திலிருந்து தங்கம் வாங்கியது தொடர்பாக London Bullion Market Association செய்த விசாரணைகள் காரணமாக Perth mint மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

The unveiling a $1.8 million one-of-a-kind coin collection crafted by The Perth Mint, in Perth, Wednesday, June 7, 2017. The Australian Trilogy celebrates a selection of the nation's natural treasures. Source: AAP / TONY MCDONOUGH/AAPIMAGE
Financials Crime Regulator - Austrace இந்த விசாரணைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் Perth Mint இற்கு பல மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.