அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச மாணவர்கள் திரும்புவதற்கு வசதியாக சில தளர்வுகளையும் அரசு அறிவித்தது.
ஆஸ்திரேலியாவை உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் விருப்பத்தெரிவாக மாற்றும்வகையில் அரசின் இச்சலுகைகள் அமைந்துள்ளன.
இதன்படி ஜனவரி 19 முதல் மார்ச் 19 வரையான காலப்பகுதிக்குள், ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்களின் விசா விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.
விசா விண்ணப்ப கட்டணத்தை மீளப்பெறுவதற்கு டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்க முடியும்.
அதேபோன்று மாணவர் விசாவுடன் இங்கு வருபவர்கள் வேலைசெய்ய வேண்டுமெனில், தமது கற்கைநெறி ஆரம்பமாகும்வரை காத்திருக்க வேண்டியிருந்த பின்னணியில் தற்போது இதிலும் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

International students are Australia's largest services export sector. Source: Getty Images
இதன்படி மாணவர் விசாவுடன் இங்கு வருபவர், தனக்கான கற்கை நெறி ஆரம்பமாவதற்கு முன்னரேயே அவர் வேலைசெய்ய ஆரம்பிக்கலாம்.
மேலும் மாணவர் விசாவிலுள்ளவர் எத்தனை மணிநேரங்கள் வேலைசெய்யலாம் என்ற கட்டுப்பாட்டையும் ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது.
இக்கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏப்ரல் மாதம் மீளாய்வு செய்யப்படும்.
இதேவேளை கொரோனா காலத்திற்கு முன்பு graduate visa subclass 485 ஐப் பெறுவதற்கு பல்கலைக்கழகத்திற்க நேரடியாகச் சென்று கற்றிருப்பது அவசியம். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் online படிப்புகளும் graduate விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது கணக்கில் கொள்ளப்படுகிறது.

Students were among the first to be allowed to enter Australia. Source: AAP
இந்தப்பின்னணியில் கொரோனா பரவலையடுத்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச மாணவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததால், அரசு அறிவித்துள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களும் தமது கட்டணங்களைக் குறைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் எனவும், மேலும் பல நாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வருவார்கள் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று புலமைப்பரிசில்களை வழங்குவதும் மாணவர்களை தொடர்ந்தும் இங்கு கல்விகற்கத் தூண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவர் விசாவிலுள்ளவர்களுக்கான சலுகைகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு உள்துறை அமைச்சின் இணையத்தளமான க்குச் செல்லவும்.

International students line up for coaches after arriving at Sydney Airport in Sydney, Monday, December 6, 2021. Source: AAP/Bianca De Marchi
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.