மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருத்துதெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலையற்ற வாழ்க்கை வாழும் இவர்களுக்கு, நிலையான எதிர்காலம் அமையவேண்டுமென குறித்த 78 வீதமானோரும் வலியுறுத்தியுள்ளனர்.
தற்காலிக விசாவுடன் இங்கிருப்பவர்கள், நாட்டின் சில துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமைவர் என, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் ஆஸ்திரேலியர்கள் பணிபுரியத் தயங்கும் பல துறைகளில், இவர்கள் வேலைசெய்ய முன்வருவர் எனவும் 33 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பல்கலாச்சார நாடான ஆஸ்திரேலியா, இவர்களால் மேலும் மெருகூட்டப்படும் எனவும், என்னவிதமான விசாவில் இருந்தாலும் தமக்கான நிலையான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவேண்டுமெனவும், குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள மனித உரிமை சட்ட மையத்தின் David Burke, தமது வாழ்க்கையைத் தாம் விரும்பியபடி திட்டமிட்டமிடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அரசின் விசா முறைமை பல குடும்பங்களை ஒன்றிணையமுடியாதவாறு பிரித்துவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக விசாவுடன் இங்கு வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, ஆஸ்திரேலியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளமையை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துவதாகவும் David Burke தெரிவித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.