இச்சடலங்கள் காணாமல்போன தாய் மற்றும் மகனுடையது என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4.30 மணியளவில் Cooper Creek கால்வாயில் Mazda3 கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டு அதனுள்ளிருந்த தனிப்பட்ட உடைமைகளை கண்டுபிடித்தபோதிலும், காரின் உரிமையாளரான 67 வயதான ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் அவருடன் இருந்ததாக நம்பப்படும் அவரது 34 வயது மகன் பிரமுத் ஆகியோரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இலங்கைப் பின்னணிகொண்ட ஹேமலதா சச்சிதானந்தம் வானொலி அறிவிப்பாளராக தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
மகன் பிரமுத் விசேட தேவையுடையவர் எனவும் மற்றவர்களுடன் பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாதவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அதே கால்வாய் பகுதியில் ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, இவை ஹேமலதா சச்சிதானந்தம் மற்றும் பிரமுத்துடைய சடலங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர் நடந்திருக்கலாம் எனவும் வழமையாக ஒவ்வொரு நாளும் பிற்பகலில் மகனையும் அழைத்துக்கொண்டு இரவு உணவிற்காக வெளியில் செல்லும் பழக்கம் ஹேமலதாவிற்கு இருந்ததாகவும் அவரது மைத்துனர் விஜயரட்ணம் SBS தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியில் சென்றபோது மழை வெள்ளத்தில் இவர்களது கார் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது பின்னால் வந்துகொண்டிருந்த வாகனம் இவர்களது காரை இடித்ததால் விபத்து ஏற்பட்டு கார் கால்வாய்க்குள் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் தமக்கு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.