ஆண்களின் ஆரோக்கியத்திற்காக மீசையை முறுக்குவோம் வாங்க

ஆண்களிடையே பொதுவாகக் காணப்படும் புற்றுநோய்கள், மன நோய் போன்ற கொடிய நோய்கள் தொடர்பிலான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் 2003ஆம் ஆண்டு நம் நாட்டில் தொடங்கப்பட்டது ‘மொவம்பர்’ இயக்கம். தற்போது பல நாடுகளிலும் நவம்பர் மாதம் ‘மொவம்பர்’ மாதம் என கடைப் பிடிக்கப் படுகிறது.

Young girl making moustache with long hair

Young girl making moustache at home Source: Moment RF

mustache icon
vector set of hipster mustache, icon template Source: iStockphoto
நவம்பர் மாதம் வந்தவுடன், பார்ப்பவர்களைப் பயமுறுத்தும் வகையில் கிடா மீசை வைப்பது பலரது வழக்கம்.  அதை விடப் பயமுறுத்துகிறது சில புள்ளி விபரங்கள்:

  • இந்நாட்டில் வாழும் ஆண்களில், 15 மற்றும் 44 வயதிற்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் இறப்பதற்குரிய காரணங்களில், தடுக்க முடிகிற முதன்மை காரணம் - தற்கொலை.
  • இந்நாட்டில் சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர்.  (காரணம் தெரிய வேண்டுமென்றால் ManUp! என்ற ஆவணப்படம் பாருங்கள்.)
மெல்பன் நகரில் வசிக்கும் (Travis Garone மற்றும் Luke Slattery) இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆண்கள் மீசை வைப்பது அருகி வருவது குறித்து கதை போனது.  அவர்களையும் சேர்த்து 30 ஆண்கள் மீசை வைத்துக் கொண்டார்கள்.
அதற்கடுத்த வருடம், 2004 ஆம் ஆண்டில், மீசை வைத்துக் கொள்வது மட்டுமின்றி, ஆண்களுக்கே தனித்துவமான பிரச்சனைகள் குறித்து பிரச்சாரமும் செய்வதென்று முடிவெடுத்தார்கள்.  மீசை வைக்கும் மாதமான நவம்பர் மாதத்திற்கு ‘மொவம்பர்’ (Movember) என்று பெயர் சூட்டி அதனை பதிவும் செய்தார் Travisஇன் சகோதரர் Adam Garone.  450 பேர் கலந்து கொண்ட அந்த ஆண்டில், ‘மொவம்பர்’ பிரச்சாரம் மூலம் 54 ஆயிரம் டொலர்களை சேர்த்து Prostate Cancer Foundation of Australia என்ற ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கினார்கள்.

இப்படியாக ஆரம்பித்த ‘மொவம்பர்’ பிரச்சாரம், தற்போது 21 நாடுகளில் செயல் படுத்தப்படுகிறது.  இந்தப் பிரச்சாரம் மூலம், ஆண்களின் உடல், உள நல திட்டங்களுக்கு, கடந்த வருடம் வரை 6,538,699 பேர் நிதி திரட்டியுள்ளார்கள்,  1,250ற்கும் அதிகமான ஆண்களுக்கான சுகாதார திட்டங்களுக்கு இதன் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
‘மொவம்பர்’ – இதில் பங்கு கொள்ள, ஒருவர் ஐந்து விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

முதல் விதி
  • முகத்தை சுத்தமாக சவரம் செய்து கொண்டு, movember.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, நவம்பர் மாதம் முதல் தேதி தொடங்க வேண்டும்.
விதி இரண்டு
  • இந்த மாதம் முழுவதும் மீசையை வைத்திருக்க வேண்டும்.
விதி மூன்று
  • போலி மீசைகள், மீசையில்லாத தாடிகள் கணக்கில் எடுக்கப்படாது.
விதி நான்கு
  • “என்ன, புதிதாக மீசை வைத்திருக்கிறீர்கள்?” என்று யாராவது கேட்டால், ஆண்களின் உடல், மன நலன்கள் குறித்து அவர்களுடன் பேச வேண்டும்.
விதி ஐந்து
  • பங்கு கொள்பவர், ஒரு சிறந்த ஆண் மகனாக (True Gentleman) நடந்து கொள்ள வேண்டும்.
Moustache man - Bikaner, Rajasthan, India
Moustache man- Bikaner,Rajasthan,India. This picture is of a mechanic in Bikaner, he was very happy to show off his facial growth (not just grown for Movember) Source: Moment Editorial

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 


Share
Published 9 November 2021 4:09pm
By Kulasegaram Sanchayan

Share this with family and friends