கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் சிட்னியிலிருந்து பெங்களூருக்கும் மெல்பனிலிருந்து டெல்லிக்கு இடையே இந்திய விமான நிறுவனமான IndiGo உடன் இணைந்து நேரடி விமான சேவையை ஆரம்பித்த Qantas விமான சேவை அதனை தற்போது மேலும் சில நகரங்களுக்கு நேரடி சேவையை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவில் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு நேரடியாக பயணிக்கலாம்Qantas
Qantas மற்றும் IndiGo நிறுவனங்களுக்கு இடையிலான codeshare ஒப்பந்தத்தின்கீழ் பெங்களூரிலிருந்து மும்பை, கோவா, கொல்கத்தா மற்றும் சென்னை உட்பட பதினொரு இடங்களுக்கும் டெல்லியிலிருந்து அம்ரிஸ்டர், கொச்சின் ஆகிய இடங்களுக்கும் விமானசேவைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் ஆரம்பித்த Qantas நிறுவனம் அந்த codeshare ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மேலும் எட்டு நகரங்களுக்கு பயணிகள் நேரடியாக பயணிக்க முடியும். இதன் மூலம் இந்தியாவில் உள்ள 21 நகரங்களுக்கு சிட்னி, மெல்பனிலிருந்து Qantas விமான சேவை மூலம் நேரடியாக பயணிக்கலாம்.
புதிய codeshare இடங்கள் பின்வருமாறு:
- Guwahati
- Indore
- Chandigarh
- Mangalore
- Jaipur
- Nagpur
- Thiruvananthapuram
- Visakhapatnam

Customers on Qantas-IndiGo connecting flights to receive the same complimentary food and drinks on board. Credit: Qantas
Qantas - IndiGo இணைப்பு விமானங்களில் பறக்கும் வாடிக்கையாளர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்படும் போது அனுமதிக்கப்படும் luggage அளவை IndiGo இணைப்பு விமானங்களிலும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போன்று உணவு மற்றும் பானங்களை Qantas விமானத்தில் பெற்றுக்கொள்வது போன்று IndiGo விமானத்திலும் பெற்றுக்கொள்வார்கள்.
, கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.