இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள அகதிகள் உதடுகளைத் தைத்து போராட்டம்!

Hazara refugee Reza Akbari (centre) has been waiting for eight years to be resettled to another country after fleeing Pakistan.

Hazara refugee Reza Akbari (centre) has been waiting for eight years to be resettled to another country after fleeing Pakistan. Source: Supplied/Reza Akbari

இந்தோனேசியாவில் நிர்க்கதியாகியுள்ள பல அகதிகள் தம்மை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துமாறுகோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புகலிடம் கோரும் நோக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளிலிருந்து வெளியேறிய 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தோனேசியாவை இடைத்தங்கல் நாடாக பயன்படுத்தி அங்கு தங்கியுள்ளனர்.

இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் Hazara சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சுமார் 8 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை இந்தோனேசியாவில் நிர்க்கதிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நாவின் 1951 அகதிகள் சாசனத்தில் கையெழுத்திட்டிருக்காத நாடு என்ற வகையில் இந்தோனேசிய அரசு தனது நாட்டில் அகதிகளை நிரந்தரமாக குடியமர்த்தாது.

அதற்குப்பதிலாக குறித்த அகதிகளை ஆஸ்திரேலியா, கனடா , அமெரிக்கா மற்றும் UK போன்ற மூன்றாவது நாடுகளில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளில் ஐ.நா அகதிகள் அமைப்பான UNHCR-உடன் இணைந்து இந்தோனேசியா செயற்படுகிறது.

ஆனால் மூன்றாவது நாடொன்றில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ள அகதிகள், நிலையற்ற எதிர்காலத்துடன் இருக்கும் தமக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜகார்த்தாவிலுள்ள UNHCR அலுவலகம் முன்பாக கூடாரமிட்டு தங்கியுள்ள இந்த அகதிகளில் பலர் தமது உதடுகளைத் தைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Afghan refugees in Indonesia have sewn their mouths in protest against UNHCR after waiting years for updates on resettlement.
Afghan refugees in Indonesia have sewn their mouths in protest against UNHCR after waiting years for updates on resettlement. Source: Getty Images/Anadolu
இந்தோனேசியாவிலுள்ள அகதிகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது எனவும் கல்விகற்பதற்கான அல்லது வேலை செய்வதற்கான உரிமை இல்லை என்பதால் அங்குள்ள பலரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் Asia Pacific Refugee Rights Network-இன் Sajjad Askary தெரிவித்தார்.
இதேவேளை இந்தோனேசியாவிலுள்ள UNHCR-இல் தம்மை அகதி என பதிவுசெய்துகொண்ட எவரும் ஆஸ்திரேலியாவில் குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சு நடத்தி இந்தோனோசியாவிலுள்ள அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை UNHCR எடுக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவிலுள்ள Hazara சமூகத்தவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 9 December 2021 8:16pm
Updated 9 December 2021 8:25pm

Share this with family and friends