நிதிநிலை அறிக்கை 2025: பாதிக்கப்படுபவர்கள் யார்?

2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers இன்று வெளியிட்டுள்ள நிலையில், இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படப்போகின்றவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

ALCBudget2025 FEDERAL BUDGET 2025

The 2025-2026 Budget Papers are seen at a printing facility prior to being delivered to Parliament House in Canberra, Sunday, March 23, 2025. Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

LISTEN TO
NE BUDGET 2025 TAMIL image

நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

SBS Tamil

26/03/202509:46

தற்காலிக குடிவரவாளர்கள்

அடுத்த நிதியாண்டில் வெளிநாட்டு குடிபெயர்வு(இது தற்காலிக குடிவரவாளர்களைக் குறிக்கிறது) 75 ஆயிரத்தால் குறையும் என்று அரசு கணித்துள்ளது.

இந்த ஆண்டு Net overseas migration-நிகர வெளிநாட்டு குடிபெயர்வு 335,000 ஆக காணப்படும் அதேநேரம் அது அடுத்த ஆண்டு 260,000 ஆகவும், அதற்குப் பிறகு 225,000 ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பாளர்கள்

வரி வருமானத்தை மோசடி செய்யும் ஆஸ்திரேலியர்களை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கென ஆஸ்திரேலிய வரி அலுவலகத்திற்கு $999 மில்லியன் வழங்கப்படவுள்ளது.

இந்த முதலீடு ஊடாக ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக $1.8 பில்லியன் வரி வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் பெலாரஸ்

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து வரும் பொருட்களுக்கான 35 சதவீத வரிகளை அரசு நீட்டிக்கும்.

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்த பிறகு ஏப்ரல் 2022 இல் இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இது அக்டோபர் 24, 2027 வரை நீட்டிக்கப்படும்.

புகையிலை தொடர்பான குற்றவாளிகள்

சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கென $156.7 மில்லியனை அரசு ஒதுக்கியுள்ளது.

நலன்புரி கொடுப்பனவு பெறுபவர்கள்

வேலை தேடுபவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் பிற நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு சமூக சேவை குழுக்களிடமிருந்து வந்த அழைப்புகளுக்கு அரசு செவிகொடுக்கவில்லை. எனவே இவை தொடர்பில் இந்த நிதிநிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

அடுத்த மாதம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஆஸ்திரேலியாவில் இருக்கும் வீடுகளை வாங்குவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தடை விதிக்கப்படும்.

வெளிநாட்டு முதலீட்டு விண்ணப்பக் கட்டணங்களை இழப்பதால் ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு $90 மில்லியன் நட்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share
Published 25 March 2025 11:05pm
Updated 26 March 2025 5:11pm
By Renuka Thuraisingham
Source: SBS

Share this with family and friends