2025-26 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது!

நிதிநிலை அறிக்கை 2025-இல் அடங்கியுள்ள முக்கிய விவரங்கள்

Jim Chalmers speaking. The background blends together parliament house in Canberra and Australian money

The budget papers reveal more detail about where the government's money is coming from, and where it's going. Source: SBS

LISTEN TO
NE BUDGET 2025 TAMIL image

நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?

SBS Tamil

26/03/202509:46
2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers இன்று வெளியிட்டார்.

வரி குறைப்புகள் முதல் மருத்துவச் செலவுகளை குறைக்கும் திட்டங்கள் வரை பல அம்சங்களுக்கென 2025-26 நிதியாண்டிற்காக 785.7 பில்லியன் டொலர்கள் செலவிடப்படும் என அவர் அறிவித்தார்.

இந்த நிதிநிலை அறிக்கை 42 பில்லியன் டொலர்கள் deficit- பற்றாக்குறையுடன் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது mid-year financial updateஇல் கணிக்கப்பட்டதை விட குறைவான தொகை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை குறித்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை என்னென்ன அம்சங்களில் செலவிடப்படவுள்ளது எனப் பார்ப்போம்.

அடுத்த நிதியாண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 100 டொலர்கள் என வைத்துக்கொண்டு எந்தெந்த துறைகளில் இந்த 100 டொலர்கள் செலவிடப்படுகிறது என்பதை கீழுள்ள படம் விளக்குகிறது.
2025
Source: SBS
சமூகப் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு தொடர்பிலான அம்சங்களுக்கு $37 செலவிடப்படும்(இது அதிகபட்ச செலவு)

சுகாதாரத்திற்காக சுமார் $15.90, கல்விக்காக $6.90 மற்றும் பாதுகாப்புக்காக $6.60 செலவிடப்படும்.

பொது சேவைகளுக்கு $4, வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் எரிசக்தி போன்ற அனைத்து பிற சேவைகளுக்கும் $10.60 செலவிடப்படும்.

மீதமுள்ள $19.10 மற்ற நோக்கங்களுக்காக செலவிடப்படும்.

இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான செலவுகளுக்கென அரசு எங்கிருந்து பணம் ஈட்டுகிறது?

அதுகுறித்த விவரம் கீழுள்ள படத்தில் உள்ளது.
A graphic showing how the 2025 federal budget would be funded if it were $100.
Source: SBS
அடுத்த நிதியாண்டில் கருவூலத்திற்கு வரும் பணம் $100 என வைத்துக்கொண்டால், பெரும்பான்மையான பணம் நேரடியாக தனிநபர் வரி மற்றும் பிற வரிகளில் இருந்து வரும்.

குறிப்பாக தனிநபர் மற்றும் பிற withholding வரிகளிலிருந்து $47.56 வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நிறுவன வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் $19 க்கும் சற்று அதிகமாக இருக்கும்.

Goods and Services வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் $12.81 ஆகவும், பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருளிலிருந்து கிடைக்கும் வருவாய் $3.71 ஆகவும் இருக்கும்.

புகையிலை, பீர் மற்றும் மதுபானங்கள் மீதான வரிகள் ஊடாக கிடைக்கும் வருவாய் $1 க்கும் குறைவாகவே இருக்கும், அதே நேரத்தில் விசா விண்ணப்பக் கட்டணங்களிலிருந்து 57 காசுகள் மட்டுமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள $14.45 பிற மூலங்களிலிருந்து வரும்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Share
Published 25 March 2025 8:48pm
By Amy Hall
Presented by Renuka Thuraisingham
Source: SBS


Share this with family and friends