விக்டோரியாவின் regional பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு, தற்போது மெல்பனில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் மெல்பனில் வசிப்பவர்கள், குறித்த விசாவிற்கு விண்ணப்பிக்கமுடியாத நிலை காணப்பட்டது.
இப்புதிய மாற்றத்தின்படி, இனி விக்டோரியாவில் வசிக்கும் தகுதிவாய்ந்த எவரும் Skilled Work Regional (Subclass 491)விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால் இவ்வாறு 491 விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள், அந்த விசாவைப் பெறும்பட்சத்தில், regional விக்டோரியாவிற்கு சென்று வசிக்கவும் வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்படுகிறது.
Skilled Work Regional (subclass 491) என்பது விசா skilled migrants விக்டோரியாவில் regional பகுதிகளில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கின்ற விசா என்பதுடன், Permanent Residence (Skilled Regional) visa (subclass 191) ஊடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது.
Subclass 191 இதனூடாக நிரந்தர வதிவிடம்பெறுவதற்குத் தகுதிபெற வேண்டுமெனில், 491 விசாவுடன் விக்டோரியாவில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வசிக்க வேண்டும் அத்துடன் வேலை செய்ய வேண்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.