மெல்பன் விமானநிலையத்திற்கு அருகில் Airport Drive & Centre Rd intersection-இல் பொருத்தப்பட்டுள்ள வேக கண்காணிப்பு கமராவில் அதிகளவான வாகன ஓட்டுநர்கள் அகப்படுகின்ற நிலையில், இக்கமரா மூலம் ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 700 டொலர்கள் அரசுக்கு வருமானம் கிடைப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட 3 மாதங்களில் மட்டும் 5,259 பேர் இக்கமராவில் சிக்கியுள்ளதாகவும், இவ்வெண்ணிக்கை அதற்கு முந்தைய 3 மாதங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகம் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா முடக்கநிலையால் தடைப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து இவ்வாண்டு தொடக்கம் வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில், இக்கமரா ஈட்டும் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை விமானநிலையத்திற்கு செல்பவர்கள் மகிழ்ச்சி, கவலை, பரபரப்பு என பல்வேறு உணர்வுகளுக்கு உட்பட்டிருக்கக்கூடும் என்ற பின்னணியில், இக்கமரா அங்கு பொருத்தப்பட்டிருப்பதானது ஒருபோதும் ஏற்புடையதல்லவென பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியாவிலுள்ள வேக கண்காணிப்பு கமராக்களில், Sydney Road-க்கு அருகில் Western Ring Road-இல் பொருத்தப்பட்டுள்ள கமராவிலேயே மிக அதிகமானோர் அகப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திற்கும் மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட 3 மாதங்களில், 29,863 பேர் இக்கமராவில் அகப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் சுமார் 9.19 மில்லியன் டொலர்கள் மாநில அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உட்பட விக்டோரியாவில் அதிகம் பேர் அகப்பட்ட இடங்கள் குறித்த பட்டியலை கீழே காணலாம்.
- Rosanna Road & Darwin Street, Heidelberg
- Fitzroy Street & Lakeside Drive, St Kilda
- King & La Trobe Street intersection, West Melbourne
- Flinder street & William Street, Melbourne City
- Kensington Road, Kensington
———————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.