NSW-இல் அதிக வருமானம் ஈட்டும் வேக கமராக்கள்!!

நியூ சவுத் வேல்ஸின் அதிக வருமானம் ஈட்டும் வேக கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் சில புதிய இடங்கள் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளன.

Modern red light and speed camera

Modern stationary red light and speed camera Source: iStockphoto / moisseyev/Getty Images/iStockphoto

Normanhurst-இல் உள்ள Northconnex Tunnel-இன் தெற்கு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வேக கமராவின் மூலம் அதிக அபராதங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 23,387க்கும் அதிகமானோர் அபராதம் செலுத்தியுள்ளனர்.

St Peters-இல் உள்ள Princes Highway-இல் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள், அதிக நேரம் வேலை செய்து, $3.2 மில்லியனுக்கும் அதிகமான லாபம் ஈட்டி இரண்டாவது அதிக லாபம் ஈட்டும் கமராவாக பதிவாகியுள்ளது.

Normanhurst-இல் உள்ள Northconnex Tunnel-இன் தெற்கு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வேக கமரா அதிக அபராதங்கள் வசூலித்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

St Peters சந்திப்பில் கடந்த ஆண்டு வேக வரம்பு 60 கிமீ இருந்து 40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வேக மாற்றத்திற்குப் பிறகு, அப்பகுதியில் 21,000 பேருக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

NSW மாநில அரசு அப்பகுதியில் வேக வரம்பை குறைத்துள்ளது சாலை பாதுகாப்பை விட வருவாயைப் அதிகரிப்பதற்காக என்று தான் நம்புவதாக அப்பகுதி லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Ron Hoenig தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 13,912 அபராதங்களுடன் Pennant Hills-இல் உள்ள Northconnex வடக்குப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள வேக கமரா அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

Mount Victoria வில் உள்ள Great Western Highway-இல் 13,798 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Darlinghurst -இல் உள்ள Eastern Distributor பகுதில் சற்று குறைவாக 13,596 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Liverpool-இல் உள்ள Bigge Street -இல் மணிக்கு 30 கிமீ வேக மண்டலத்தில் உள்ள கமரா அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 14,134 ஓட்டுநர்களுக்கு மொத்தம் $2.58 மில்லியன் அபராதம் வசூலித்துள்ளது.

Liverpool council மேயர் உட்பட அப்பகுதி மக்கள் Bigge Street-இல் உள்ள 30 கிமீ வேக வரம்பை 40ஆக உயர்த்தும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வேக வரம்பு மாற்றத்தால் அப்பகுதியில் விபத்துக்கள் குறைந்துள்ளது என சாலை பாதுகாப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 31 August 2022 11:52am
Updated 31 August 2022 12:05pm
By Selvi
Source: SBS

Share this with family and friends