இதெற்கென உருவாக்கப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் "கிரீன் கார்டு" முறையை போன்று வெற்றியாளர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான பாதை வழங்கப்படவுள்ளது.
இது இரண்டு-படி திட்டமாக அறிமுகமாகிறது. இதன் முதல் கட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் மற்றும் அவர்கள் வருவதற்கு முன்பு அவர்களின் உடல்நலம், குணம் மற்றும் அடிப்படை ஆங்கிலத் திறன்களை சரிபார்க்க சோதனைகளைச் சந்திக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான உறவை கட்டியெழுப்புவதற்கான இந்த சட்டமுன்முடிவு இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் Pat Conroy தெரிவித்தார்.
நிரந்தர குடியேற்ற ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு ஒதுக்குவது இதுவே முதல் முறை - இது புரட்சிகரமானது என்றும் Pat Conroy தெரிவித்தார்.
இத்திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளது என்றும் அடுத்த வாரம் நடைபெறும் பசிபிக் தீவு மன்றத்திற்கு முன்னதாக பிராந்திய தலைவர்களுடன் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்சார் குடியேற்றத்தின் கீழ் நிரந்தர வதிவிடத்தை கோரும் பிற நாடுகளின் விண்ணப்பதாரர்கள் தற்போது முடிவுகளுக்காக சுமார் ஆறு மாதங்கள் காத்திருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஆனால் அவர்கள் இப்புதிய திட்டத்திற்கு தகுதி பெற மாட்டார்கள்.
Pacific Engagement Visa என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீசா லொட்டரிக்கு பின்வரும் நாடுகளில் வசிப்பவர்கள் தகுதி பெறுவார்கள்.
- Vanuatu
- Tuvalu
- Tonga
- Timor-Leste
- Solomon Islands
- Samoa
- Republic of the Marshall Islands
- Papua New Guinea
- Palau
- Nauru
- Kiribati
- Fiji
- Federated States of Micronesia
இந்த வீசா திட்டத்திற்கு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் $175 மில்லியன் செலவாகும் என்றும் பின்னர் 2026 முதல் ஆண்டுக்கு $80 மில்லியன் செலவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்குள் skilled migrants-திறமை அடிப்படையில் உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை 195,000-ஆக அதிகரித்த லேபர் அரசு தற்போது பசிபிக் நாடுகளில் உள்ளவர்களை உள்ளவங்க இந்த லாட்டரி வீசா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.