குயின்ஸ்லாந்து விபத்தில் இந்தியச்சிறுமியும் தாயும் மரணம்! தந்தையும் இரு மகன்களும் காயம்!!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Supplied/Toowoomba Malayalee Community

Source: Supplied/Toowoomba Malayalee Community

நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து  சம்பவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.

Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து பிரிஸ்பேனுக்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருக்கிறது.

Lotsy Jose குடும்பத்தின் கார் Toowoomba அருகே Captains Mountain பகுதியில் வைத்து ட்ரக் ஒன்றுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
Queensland accident -
Source: Supplied
இதையடுத்து தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட அதேநேரம் கணவனும் இரு மகன்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குயின்ஸ்லாந்து சிறுவர் மருத்துவமனையில் தாதியாக பணிபுரிவதற்கான வாய்ப்பு Lotsy Jose-க்கு கிடைத்ததையடுத்து இக்குடும்பம் பிரிஸ்பேனுக்கு குடிபெயர்ந்துசென்றபோதே விபத்து சம்பவித்ததாக இவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த Lotsy Jose வேலைவாய்ப்புக்காக மிகுந்த சிரமப்பட்டதாகவும், இவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் இந்தியாவிலிருந்த கணவரும் 3 பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர்; ஆஸ்திரேலியா வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Community raises $300K overnight to help family that met with fatal accident
Source: Supplied/Toowoomba Malayalee Community
Lotsy Jose-Bipin Ouseph தம்பதியர் ஆஸ்திரேலியாவில் தமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆரம்பிக்கவிருந்த தருணத்தில் பேரிடியாக இச்சம்பவம் இடம்பெற்றுவிட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இக்குடும்பம் முதலில் வியாழக்கிழமையே  Orange-இலிருந்து பிரிஸ்பேனுக்கு புறப்படத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அங்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமை பிற்பகலே அவர்கள் புறப்பட்டுவிட்டதாகவும், இடையில் இவ்விபத்து சம்பவித்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் Lotsy Jose குடும்பத்திற்கு உதவும் நோக்கில் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிதிசேகரிப்பு ஊடாக ஒரேநாளில் 3 லட்சம் டொலர்களுக்கு மேல் பண உதவி கிடைத்துள்ளது.
Community raises $300K overnight to help family that met with fatal accident
Source: Screenshot/gofundme
கணவன் Bipin Ouseph-க்கு இன்னமும் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இப்பணம் அவருக்கும் இரு பிள்ளைகளுக்கும் மிகவும் உதவும் எனவும் இறுதிநிகழ்வுக்கும் இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப்பின்னணியில் குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாகவும், 38 வயது ட்ரக் ஓட்டுநருக்கு பாரிய காயமெதுவும் ஏற்படவில்லை எனவும், அவர் தமது விசாரணைகளுக்கு உதவிவருவதாகவும் குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் விபத்து குறித்த தகவல்கள் அல்லது வீடியோ ஆதாரங்கள் இருப்பின் அவற்றைத் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Readers seeking support can contact Lifeline for 24-7 crisis support on 13 11 14, and Kids Helpline on 1800 55 1800 (for young people aged 5 to 25). More information is available at and . 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 24 July 2021 3:28pm
Updated 24 July 2021 3:43pm
Source: SBS Malayalam

Share this with family and friends