இலங்கை இளைஞர் ஆஸ்திரேலியாவில் அகால மரணம்!

இலங்கைப் பின்னணிகொண்ட பொறியியலாளர் ஒருவர் விக்டோரிய மாநிலம் Coringhap-இல் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Kushan

Source: Facebook

இலங்கை காலியைச் சேர்ந்த 30 வயதுடைய Kushan Niroshana என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

Kushan Niroshana விக்டோரியா மாநிலம் Ballarat பகுதியில் பொறியியலாளராக பணிபுரிந்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் Ballarat-இலிருந்து Colac-க்கு  சென்றுகொண்டிருந்தபோது விபத்து சம்பவித்திருப்பதாகவும், இவரது கார்  பிராதான வீதியிலிருந்து விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதிய நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அவசர சேவைப்பிரிவினர் வரவழைக்கப்பட்டபோதும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பே இவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Kushan Niroshana அனைவருடனும் நட்புடன் பழகுபவர் என்பதுடன் உதவும் மனப்பான்மை உள்ளவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Kushan Niroshana இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம் Civil Engineering Department-இன் Batch 12'-ஐச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


 


Share
Published 10 July 2021 8:59pm
Updated 10 July 2021 9:06pm

Share this with family and friends