கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (2021) ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு இரவும் 122,000 க்கும் அதிகமானோர் வீடற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கிறது.
வீடற்ற நிலைமை என்பது உங்கள் தலைக்கு மேல் கூரை இல்லாததை விட அதிகமாகும். பல பேருடன் நெரிசலான சூழலுக்கு மத்தியில் வீட்டைப் பகிர்ந்துகொள்வது, தெரிந்தவர்களின் வீடுகளில் சென்று தங்குதல், உங்கள் காரில் தூங்குவது அல்லது crisis accommodation என்ற நெருக்கடி நேர தங்குமிடங்களில் தங்குவது ஆகியவை வீடற்ற நிலைமை என்பதற்குள் அடங்கும்.
பல அரசு சாரா நிறுவனங்கள் பொதுவாக மாநில அல்லது பெடரல் அரசின் நிதியைப் பயன்படுத்தி crisis accommodation ஐ வழங்குகின்றன.
பல்வேறுபட்ட சூழ்நிலைகளின் கீழ் உடனடி தங்குமிடம் தேவைப்படும் மக்களுக்கான பாதுகாப்பான தற்காலிக தங்குமிடமே crisis accommodation என விளக்குகிறார் ஆஸ்திரேலியாவில் வீடற்றவர்களுக்கான சேவைகளை வழங்கும் மிகமுக்கியமான அமைப்பான Salvation Armyயின் Homelessness National General Manager Jed Donoghue.
Increasingly women are becoming homeless on fleeing domestic violence. Source: Getty / ArtistGNDphotography
Women’s Community Shelters அமைப்பு அவசரகால தங்குமிடத்தைக் கண்டறிய உதவுகிறது மற்றும் வீடற்ற பெண்களுக்கு ஆதரவளிக்கிறது, இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.
துன்புறுத்தல் இல்லாமல் நிரந்தர வாழக்கூடிய வீடுகளை மலிவு விலையில் கண்டுபிடிக்கவும் பெண்களுக்கு இந்த வலையமைப்பு உதவுகிறது.
Women’s Community Shelters ஆனது நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அதற்கு அப்பால் அரச உதவி மையங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு உதவி தேவைப்படும்போது (உங்கள் கணினி அல்லது கைபேசியைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றால்) நீங்கள் Women’s Community Shelters என இணையத்தில் தேடலாம் அல்லது womenscommunityshelters.org.au ஐப் பார்வையிடலாம் என்று Annabelle Daniel பரிந்துரைக்கிறார்.
நீங்கள் வீடற்றவராக மாறினால் அல்லது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் நெருக்கடிகால உதவி எண்கள் உள்ளன.
Homeless young invalid man sitting in wheelchair on the street Credit: LaraBelova/Getty Images
உங்களது அன்புக்குரியவர்கள் அல்லது பிறரின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படும் எவரும் 1800 015 188 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ, safesteps.org.au என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அவர்களின் Web Chat மூலமாகவோ Safe Steps ஐத் தொடர்பு கொள்ளலாம்.
Safe Steps போன்ற நெருக்கடி நேர உதவி எண்களை நீங்கள் அழைக்கும் போது, உங்களின் உடனடி நிலைமை குறித்து அவர்கள் சில கேள்விகள் கேட்பார்கள் என Nicole Abdilla கூறுகிறார்.
உங்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிதேவைப்பட்டால் நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கோரலாம்.
இதேவேளை ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்கும் நபர்களுக்கான தங்குமிட வசதி தொடர்பில் 1800RESPECTஐ அழைக்கலாம்.
நீங்கள் உடனடி ஆபத்தில் இல்லை என்றால், Safe Steps குடும்ப வன்முறை தொடர்பிலான உதவிகளை வழங்கும் உள்ளூர் நிபுணர்கள் மற்றும் பிற ஆதரவு சேவைகளுக்கு பரிந்துரைகளை வழங்குகிறது. இதில் புலம்பெயர்ந்தோர் மற்றும் சட்ட சேவைகளும் அடங்கும்.
When people are assessed as being at serious risk they can be directed to crisis accommodation services. Source: Getty / David Freund
நெருக்கடி நிலையில் யாரைத் தொடர்பு கொள்ளலாம் என்ற ஆரம்பப்புள்ளியைக் கண்டறிய, crisis accommodation government website என்பதை கூகுள் செய்யவும் அல்லது நேரடியாக யாரையேனும் சந்திக்க உங்கள் பகுதியில் உள்ள Salvosஐத் தொடர்பு கொள்ளவும்.
இரண்டு சேவைகளிலும் பல மொழிகளில் தகவல்கள் கிடைக்கும்.
இதேவேளை தீவிர சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், அரசு வழங்கும் நெருக்கடிகால கொடுப்பனவிற்கு நீங்கள் தகுதி பெறலாம்.
கடுமையான நிதி நெருக்கடியை அனுபவிக்கும் மக்களுக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் இந்த கொடுப்பனவு கிடைக்கும் என்று கூறுகிறார் Services Australia செய்தித் தொடர்பாளர் Justin Bott.
There is more demand than we can meet. Source: Getty / imamember
உங்களிடம் நிலையான வீட்டு முகவரி இல்லாவிட்டாலும் அரசின் நெருக்கடி கால கொடுப்பனவை நீங்கள் பெறமுடியும்.
நெருக்கடி காலத்தில் உங்களுக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். Mission Australia, St Vincent de Paul மற்றும் Australian Red Cross உள்ளிட்ட பல அமைப்புகள் நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் crisis accommodation உட்பட ஏனைய ஆதரவு சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
Some crisis accommodation services:
Call 1800RESPECT for housing support for people escaping domestic and family violence
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.