ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான முக்கிய குறிப்புகள்

Learning to ride

Anyone can build their bike riding skills. Credit: People on Bicycles

ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுவதென்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.


நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, bike paths, trails மற்றும் bike lanes போன்ற சைக்கிள் ஓட்டுவதற்கு வசதியான கட்டமைப்புகள் இருக்கலாம், அதே போல் local community riding groups அல்லது sporting cycling அமைப்புகளும் இருக்கலாம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என எவருக்கும், சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது வித்தியாசமான மற்றும் வேடிக்கையான அனுபவமாக இருக்கும். எனினும் சைக்கிளில் பாதுகாப்பாக சவாரி செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

சைக்கிள் ஓட்டுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க ஒரு சிறந்த வழியாகும், மேலும் மலிவான மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத போக்குவரத்து முறையாகும்.

பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டுவதற்கு நீங்கள் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், மேலும் உங்கள் சைக்கிளை எவ்வாறு பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
Bike riding to work
Cycling to work has health benefits and reduces the number of vehicles on the road. Credit: Nate Biddle/Pexels
கணக்கெடுப்பின்படி, 2023 ஆம் ஆண்டில் 9.52 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் சைக்கிள் ஓட்டுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேநேரம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய bike riding அமைப்பான Bicycle Networkகின் மதிப்பீட்டின்படி, சைக்கிள் ஓட்டுதலை தமது வழக்கமான போக்குவரத்து வழிமுறையாக மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என அந்த அமைப்பைச் சேர்ந்த Wayde Suchodolskiy தெரிவித்தார்.

பல ஆஸ்திரேலிய பணியிடங்கள் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பயண வசதிகளையும் செய்துகொடுக்கின்றன.

பலர் தமது குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் குழுக்கள் மற்றும் அமைப்புகளும் உள்ளன.

தமது அமைப்பினூடாக பலருக்கும் சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொடுப்படுவதாக கூறுகிறார் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள People on Bicycles நிர்வாக இயக்குநர் Christina Neubauer.

சைக்கிள் ஓட்டுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வது மட்டும் போதாது எனவும் அதை பாதுகாப்பாக ஓட்டுவது எப்படி என்பதை அறிந்து கொள்வது முக்கியம் எனவும் Christina Neubauer கூறுகிறார்.

முக்கியமாக ஆஸ்திரேலியாவில் சாலைப் போக்குவரத்து விதிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுவது தொடர்பான சட்டங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.
Cycling collage.png
Left: Wayde Suchodolskiy, The Bycyle Network. Right: Christina Neubauer, People on Bicycle.
விபத்து ஏற்பட்டால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்வகையில் எப்போதும் சைக்கிள் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது முக்கியம் என்கிறார் Wayde Suchodolskiy.

சைக்கிள் ஓட்டும்போது, மற்ற சைக்கிள் ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் உட்பட உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாகன ஓட்டிகள் உங்களை எளிதாகப் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்யும் ஆடைகளை அணிவது நன்மை பயக்கும்.

அகலமான டயர்களைக் கொண்ட mountain bikes முதல் மெல்லிய டயர்களைக் கொண்ட racing bikes வரை பல வகையான சைக்கிள்கள் கிடைக்கின்றன. உங்கள் அருகிலுள்ள சைக்கிள் கடை ஒன்றிற்குச் சென்றால் இவைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் எங்கு சைக்கிள் ஓட்ட திட்டமிட்டுள்ளீர்கள், அது பயணத்திற்காகவா அல்லது உடற்பயிற்சிக்காகவா என்பதைப் பொறுத்து உங்களுக்கு எந்த வகையான சைக்கிள் அல்லது உபகரணங்கள் தேவைப்படலாம் என்பதை தீர்மானிக்கலாம் என்கிறார் Christina Neubauer.

நீங்கள் புறப்படுவதற்கு முன்பாகவே உங்கள் சைக்கிள் பயணத்தைத் திட்டமிடுவதும் அவசியம்.
Be visible when riding a bicycle
It's important to be visible when riding a bicycle. Credit: Jackie Alexander/Unsplash
ஆஸ்திரேலியாவில் உள்ள பல நகரங்கள் பிரத்தியேகமாக bicycle paths அல்லது bike lanes ஐக் கொண்டுள்ளன. இப்பாதைகளால் பயணம் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களை பார்த்து மகிழ வாய்ப்புக்கிடைக்கும் என Wayde Suchodolskiy சொல்கிறார்.

நீங்கள் சைக்கிள் ஓட்டுதலில் ஈடுபட ஆர்வமாக இருந்தால், ஒத்த எண்ணம் கொண்ட சைக்கிள் ஓட்டுதல் ஆர்வலர்களைக் கண்டறிய பல தெரிவுகள் உள்ளன என்கிறார் ஊhசளைவiயெ நேரடியரநச.

Local community cycling groups ஊடாக உதவிபெறும் அதேநேரம் சமூக ஊடகங்களின் ஊடாக மற்ற சைக்கிள் ஓட்டிகளுடன் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று Wayde Suchodolskiy கூறுகிறார்.
Bike lane on a Melbourne road
A bike lane on a Melbourne road. Credit: Pat Whelen/Pexels
Christina Neubauer கூறுவது போல, விளையாட்டு, பயணம் அல்லது பொழுதுபோக்கு என எதுவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் அனைவரும் சைக்கிள் ஓட்டுவதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

For further information about cycling in Australia, visit:

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection. Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our
page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand.

Subscribe or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to 

Share