ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 200,000 தொன்களுக்கும் அதிகமான ஆடைகளை குப்பையில் வீசுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இது ஒரு நபருக்கு சராசரியாக 10 கிலோகிராம் ஆடை என்ற அளவில் உள்ளது.
இருப்பினும், நமது தேவையற்ற ஆடைகளை மறுசுழற்சி செய்வதையோ, நன்கொடையாக வழங்குவதையோ அல்லது மாற்றீடு செய்வதையோ தெரிவுசெய்தோம் என்றால், ஆஸ்திரேலியாவின் ஆடைக் கழிவு நெருக்கடியை எதிர்த்துப் போராட நாம் உதவலாம்.
Fashion தொழில்துறை அதிக மாசுபடுத்தும் தொழில்களில் ஒன்றாகும். நாம் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 56 புதிய ஆடைகளை வாங்குகிறோம் என்று ஆஸ்திரேலிய Fashion Council தெரிவித்துள்ளது.
Fast Fashion என்பது மலிவானது என்பதுடன் மக்களால் வாங்கக்கூடிய விலைகளிலுள்ள ஆடைகளாகும். இவை சமீபத்திய போக்குகளுக்கு ஏற்ப சில்லறை விற்பனையாளர்களால் விரைவாக உற்பத்தி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை தொடர்ந்து shopping செய்ய ஊக்குவிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது - அதாவது, இவை விரைவாக பழுதடைந்தோ அல்லது மங்கிப்போகும்போது நாங்கள் புதிய ஆடைகளை அதிகமாக வாங்குகிறோம்.
நம் ஆடைகளை பொறுப்புடன் அப்புறப்படுத்துவது நம் கையில்தான் உள்ளது. குறிப்பாக அவற்றை குப்பைக் கிடங்கிற்கு அனுப்புவதற்குப் பதிலாக, அவற்றை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யலாம்.
அற்காக curb-side recycling binஇல் அவற்றை போடக்கூடாது என வலியுறுத்துகிறார் Planet Arkஇன் தலைமை நிர்வாக அதிகாரி Rebecca Gilling.

Source: Moment RF / Andrew Merry/Getty Images
இதற்கான சேகரிப்பு சேவையை ஆன்லைனில் பதிவு செய்யலாம். கட்டணமொன்றைப் பெற்றுக்கொண்டு, ஒரு நிறுவனம் உங்கள் தேவையற்ற ஆடைகளை எடுத்து அதை மறுசுழற்சி செய்ய அல்லது மீண்டும் பயன்படுத்த ஏற்பாடு செய்யும்.
நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய மற்றொரு தெரிவு, தேவையற்ற ஆடைகளை தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாகும். உங்கள் ஆடைகளை charity shop இல்லையெனில் ‘op shop' இல் கொண்டுசென்று போடுவதற்கு அல்லது உங்கள் பகுதியிலுள்ள charity binஇல் கொண்டுசென்று போடுவதற்கு எதுவும் செலவாகாது.
ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள 'op shops' நன்கொடையாக வழங்கப்பட்ட ஆடைகளை விற்பதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உதவவென கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டுகின்றன.
பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள ஆடைகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளிப்பதை தவிர்க்க வேண்டுமென Rebecca Gilling வலியுறுத்துகிறார்.

Workers sorting out clothing at the St Vincent de Paul Society, a major charity recycling clothes, in Sydney. Source: AFP / PETER PARKS/AFP via Getty Images
இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் குறித்த விவரங்களையும் ஆடை கழிவுகள் பற்றிய சில தகவல்களையும் charitablerecycling.org.au என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என Charitable Recycling Australia தலைமை நிர்வாக அதிகாரி Omer Soker கூறுகிறார்.
உங்கள் தேவையற்ற ஆடைகள் நன்கொடையாக வழங்கப்படுவதற்கு தகுதியற்றவை எனில் அடுத்து இருக்கும் தெரிவு அவற்றை மறுசுழற்சி செய்வதாகும்.
சில முக்கிய ஆடை விற்பனையாளர்கள் உங்கள் தேவையற்ற ஆடைகளை மறுசுழற்சி செய்யும் திட்டங்களை நடத்துவதாக Planet Arkஇன் தலைமை நிர்வாக அதிகாரி Rebecca Gilling விளக்குகிறார்.

Ol hangem ol klos long hanga. i gat ol diferen kaen klos mo hanga long wan klos exchange parti. Source: Moment RF / Marissa Powell/Getty Images
இதேவேளை தேவையற்ற ஆடைகளைக் கொண்டுசென்று போடுவதற்கான வசதி உங்கள் கவுன்சிலிலும் இருக்கலாம்.
Sports shoesக்கான மறுசுழற்சி திட்டம் கூட இருப்பதாக Rebecca Gilling கூறுகிறார்.
உங்கள் அலமாரியைப் புதுப்பிக்க சிக்கனமான மற்றும் பொறுப்பான வழியை நீங்கள் தேடுகிறீர்களானால், clothes swap என்ற தெரிவைப்பற்றி சிந்திக்கலாம்.
இதற்கெனவே உள்ள The Clothing Exchange போன்ற தொழில்முறை நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் கவுன்சில்கள் இப்போது இணைந்து செயல்படுகின்றன.
இந்தத்திட்டத்தின்படி உங்களுக்குப் பிடிக்காத அல்லது தேவையற்ற ஆடைகளைக் கொண்டுவந்து அவற்றைக் காட்சிப்படுத்தும் அதேநேரம் அந்த ஆடைகளுக்குப் பதிலாக வேறு ஆடைகளை மாற்றீடு செய்துகொள்ளலாம் என சிட்னி நகர கவுன்சிலர் Adam Worling விளக்குகிறார்.
Clothes swap எங்கே நடக்கிறது என்ற விவரங்களை clothingexchange.com.auஇல் பெற்றுக்கொள்ளலாம்.
இதேவேளை நமது ஆடைகளின் முழு வாழ்க்கைச் சுழற்சியையும் கருத்தில் கொண்டு முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்துவது அவசியமாகும்.
அத்துடன் உங்களுக்கு உண்மையிலேயே தேவையான பொருட்களை வாங்கி, முடிந்தவரை அவற்றை பயன்படுத்தும் அதேநேரம் நன்கொடையாக வழங்கக்கூடிய நிலையிலுள்ளவற்றை மட்டும் நன்கொடையாக வழங்கிவிட்டு ஏனையவற்றை உரியமுறையில் மறுசுழற்சி செய்வது அவசியம் என Charitable Recycling Australia தலைமை நிர்வாக அதிகாரி Omer Soker வலியுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.