“போராடப் பல வழிகள் உள்ளன... நான் பேனாவைத் தேர்ந்தெடுத்தேன்”

Roy Ratnavel with his first book, Prisoner #1056: How I survived War and found Peace.

Roy Ratnavel with his first book, Prisoner #1056: How I survived War and found Peace.

இலங்கையின் தலைநகர் கொழும்பில், 1969ஆம் ஆண்டு பிறந்த றோய் ரத்னவேல், பதினேழு வயதில், ஒரு அரசியல் கைதியாகி கொடூரமான சிறை வாசத்தை சில மாதங்கள் அனுபவித்தார். ஒரு குடும்ப நண்பரின் உதவியினால் சிறையிலிருந்து விடுதலையான அவர் தனது பதினெட்டாவது வயதில், தன்னந்தனியாக கனடா நாட்டிற்குப் புகலிடம் கோரிச் சென்றார். பல கடினமான நிகழ்வுகளுக்கு முகம் கொடுத்த அவர், கனடாவின் மிகப்பெரிய சுயாதீன நிதி மேலாண்மை நிறுவனத்தில் பெரும் பதவி ஒன்றை வகித்த பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றுள்ளார். “தற்செயலாகப் பிறப்பால் இலங்கையர், மார் தட்டிப் பெருமையுடன் தமிழர், விருப்பத்தால் கனேடியன்” என்று தன்னைப் பற்றிக் கூறுகிறார்.


அவர் எழுதிய முதல் புத்தகமான, “கைதி இலக்கம் #1056: நான் போரிலிருந்து எப்படித் தப்பிப் பிழைத்தேன், அமைதியைக் கண்டேன்” என்ற நூலை சிட்னியிலும் மெல்பனிலும் வெளியிடுவதற்காக ஆஸ்திரேலியா வந்திருந்த சமயம் அவருடன் நேரில் பேசும் வாய்ப்பை குலசேகரம் சஞ்சயன் பயன்படுத்தி, கண்ட நேர்காணல்.

இரண்டு பாகங்களாகப் பதிவாகியுள்ள நேர்காணலின் இறுதி பாகம் இது.

நேர்காணலின் முதல் பாகத்தைக் கேட்க, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.



முதல் பாகம்
Sanchayan 2023 097 image

உங்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க சுலபமான வழி என்ன தெரியுமா?

SBS Tamil

16:49



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share