“இது எனது முதல் நூல்... நிச்சயம் கடைசி நூல் அல்ல”

Left: Cover of the recently published book, "Home to Biolela"; Right: Priya Nadesalingam and her family arrive in Biloela after many years in immigration detention centres, Fri 10 June, 2022

Left: Cover of the recently published book, "Home to Biolela"; Right: Priya Nadesalingam and her family arrive in Biloela after many years in immigration detention centres, Fri 10 June, 2022

Allen & Unwin வெளியிட்டுள்ள "Home to Biloela: The Tale of the Tamil Family Who Touched Our Hearts", என்ற நூல், ஆஸ்திரேலியர்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு இலங்கைத் தமிழ் அகதிக் குடும்பத்தின் பயணத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. அவர்களின் அவலநிலை மற்றும் அவர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க, ஒரு நெருக்கமான கிராமப்புற சமூகம் நடத்திய போராட்டத்தின் அழுத்தமான கதையை விரிவாக ஆராய்கிறது.


ஒரு எழுத்தாளராக அறிமுகமாகியிருக்கும் பிரியா நடேசலிங்கம், ஊடகவியலாளர் Rebekah Holt உடன் இணைந்து தனது கதையை இந்த நூலில் விவரிக்கிறார். உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தனது குழந்தைப் பருவ அனுபவங்களையும், நெரிசலான மீன்பிடிக் கப்பலில் இந்தியப் பெருங்கடலைக் கடந்து ஆஸ்திரேலியா வந்தடைந்த பயணத்தையும், பல்வேறு குடியேற்ற தடுப்பு முகாம்களில் கழித்த வருடங்களையும் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார் பிரியா.

அவருடைய முதல் நூல் குறித்தும் எதிர்கால முயற்சிகள் குறித்தும் பிரியா நடேசலிங்கம் மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.




SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.



Share