SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் தமிழ் கலந்து ஒரு வரலாற்று இசை நிகழ்வு!
Nadhamuni Gayatri Bharat and Swapna Raghavan
டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இசை மற்றும் கலைகளை கருவிகளாகப் பயன்படுத்தி Stage Foundation அமைப்பின் நிறுவனர் ஸ்வப்னா ராகவன் “Shakti Spirit” என்ற நிகழ்வை அரங்கேற்றுகிறார். ஆஸ்திரேலிய ஜாஸ் கலைஞர் Dr. Sandy Evans மற்றும் டிரெயில்பிளேசிங் கலைஞர் Jess Green ஆகியோர் முதன்முறையாக இந்திய பாரம்பரிய பாடகர் நாதமுனி காயத்ரி பாரத் மற்றும் கடம் கலைஞர் பிரஹலாத் ஐயர் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்வை நடத்துகின்றனர். இந்த நிகழ்வு குறித்து ஸ்வப்னா அவர்களும் காயத்ரி அவர்களும் விளக்குகின்றனர். அவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share