இதன்படி தொழிலாளர் பற்றாக்குறை பாரியளவில் காணப்படும் துறைகளில்(குறிப்பாக nursing, teaching, IT, engineering போன்ற துறைகளில்) கல்விகற்ற மாணவர்கள், தமது படிப்பு முடிந்தபின்னர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான காலம் மேலும் 2 ஆண்டுகளால் அதிகரிக்கப்படுவதாக கல்வியமைச்சர் Jason Clare அறிவித்தார்.
தற்போதுள்ள நடைமுறையின்படி bachelor's degree கற்கைநெறியை மேற்கொள்ளும் மாணவர்கள் தமது படிப்பு முடிந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிய முடியும். Master's கற்கைநெறியை மேற்கொள்பவர்கள் 3 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 4 ஆண்டுகளும் இங்கு தங்கியிருக்க முடியும்.
அரசு அறிவித்துள்ள புதிய மாற்றத்தின்படி bachelor's degree மாணவர்கள் இனிமேல் மொத்தம் 4 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரியலாம்.
Master's மாணவர்கள் 5 ஆண்டுகளும், PhD மாணவர்கள் 6 ஆண்டுகளும் இங்கு தங்கியிருந்து வேலைசெய்ய முடியும்.
அதிக ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பானது, பல சர்வதேச மாணவர்கள் இங்கு நிரந்தர வதிவிட உரிமைபெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தச் சலுகையானது தொழிலாளர் பற்றாக்குறை காணப்படும் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.